For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவலை தோய்ந்த முகம், கம்பீரமில்லாத உடல், கைகளை கட்டி கால்களில் கம்பளி போர்த்தி! புடினுக்கு என்னாச்சு?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: வெற்றி நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது கால்களை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்களுக்கு தீனி போடுகிறது.

Recommended Video

    Military Parade-ல் சோர்வாக இருந்த Vladimir Putin.. என்ன நடந்தது? | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக இந்த போரானது நடைபெற்று வருகிறது. இதனால் பலர் வீட்டை இழந்து நாட்டை இழந்து வேறு நாடுகளுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.

    ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. புடின் கொடுங்கோலன் என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இவை எல்லாவற்றையும் விட கடந்த சில தினங்களாக புடினின் உடல்நிலை குறித்த பேச்சுக்களதான் அதிகம் இடம் பெறுகின்றன.

    புடின் உடல்மொழி

    புடின் உடல்மொழி

    அண்மைக்காலமாக பொது இடங்களில் புடினின் உடல்மொழி, அவர் பேசும் விதம் உள்ளிட்டவை குறித்து சுகாதார நிபுணர்கள் ஆய்வு செய்ததில் அவருககு புற்றுநோயாக இருக்கலாம் என்றும் யூகங்கள் இருந்தன. இந்த நிலையில் புடினுக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     மே 9 ஆம் தேதி வெற்றி நாள்

    மே 9 ஆம் தேதி வெற்றி நாள்

    இந்த நிலையில் ரஷ்யாவில் ஆண்டுதோறும் மே 9 ஆம் தேதி வெற்றி நாள் கொண்டாடப்படும். 1945 ஆம் ஆண்டு ஜெர்மனியை ரஷ்யா தோற்கடித்த தினத்தை வெற்றி நாள் என ரஷ்யா கொண்டாடி வருகிறது. இந்த நாளின் போது ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் கலந்து கொண்டு உரையாற்றுவது வழக்கம்.

    விளாடிமிர் புடின்

    விளாடிமிர் புடின்

    அந்த வகையில் மே 9ஆம் தேதி நடந்த வெற்றி விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் புடின் பார்ப்பதற்கு மிகவும் சோர்ந்து போயுள்ளார். கைகளை கட்டி கொண்டு கூனி கொண்டு உட்கார்ந்துள்ளார்.

    கம்பளி போர்த்திக் கொண்டு

    கம்பளி போர்த்திக் கொண்டு

    மேலும் அவர் தனது கால்களின் மேல் கம்பளி போர்த்திக் கொண்டு உட்கார்ந்துள்ளார். வெற்றி நாளில் வழக்கமான உற்சாகத்தை புடினிடம் மக்கள் பார்க்கவில்லை. இது அவரது உடல்நிலை குறித்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. புடின் பார்கின்சன் நோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இறுக்கபிடித்த புடின்

    கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான இன்னொரு வீடியோவில் புடின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் சேர்காய் ஷோய்குவுடன் நடத்திய ஆலோசனையின் போது ஒரு மேஜையின் இரு முனைகளையும் கிரிப்பாக பிடித்துக் கொண்டிருக்கிறார். சுமார் 12 நிமிடங்கள் நடந்த இந்த மீட்டிங்கில் அவர் மேஜை முனை இறுக்க பற்றிக் கொண்டே இருந்தார். சர்வாதிகாரிகள் கொடூரமாகவும் மூட் ஸ்விங் கொண்டவர்களாகவும் இருக்க முடியும் ஆனால் ஒரு சர்வாதிகாரி வலுவிழந்து இருக்க மாட்டார் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

    English summary
    Why Vladimir Putin covers his legs with blanket at a parade? It leads to more health related rumours about him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X