அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன்.. சபதம் ஏற்ற டிரம்ப்
2020ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: 2020ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
என் மொத்த வாழ்க்கையும் வெற்றியை பற்றியதுதான். நான் பெரும்பாலும் தோல்வி அடைந்தது இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால், நான் தோற்றதே இல்லை. இந்த வாசகத்தை பல வருடங்களுக்கு முன்பு உலகம் முழுக்க பிரபலமாக ஆவதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அதே நிகழ்ச்சியில் தனக்கு அமெரிக்க அதிபராக ஆசை இருக்கிறது என்றும் கூறினார்.

அப்போது அதை பலர் கிண்டல் செய்தாலும் சென்ற முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிரடியாக பலருக்கும் அதிர்ச்சி அளித்து வெற்றியும் பெற்றார். 2016 இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, 2017 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
அதன்பின், இரண்டு வருடம் வேகமாக ஓடிவிட்டது. இன்னும் அவர் ஆட்சி முடிய முழுதாக இரண்டு வருடம் மீதம் இருக்கிறது . இந்த இரண்டு வருடத்தில் அமெரிக்க விசா விதிகள் மாற்றம் தொடங்கி, வடகொரியா உட்பட உள்நாட்டு , வெளிநாட்டு உறவுகளில், பிரச்சனைகளில் பல முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இரண்டு முறை அதிபராக இருந்துள்ளார். அவரை போல சிலர் மட்டுமே, அமெரிக்காவில் இரண்டு முறை அதிபராக இருந்துள்ளனர். அந்த வரிசையில் தானும் சேர முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். இந்த நிலையில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக அதிபர் பதவிக்காக போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். மக்களின் வரவேற்பு , ஆதரவு தனக்கு மிகவும் அதிகமாகி இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சுக்கு அவரது கட்சியினர் சிலர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். சிலர் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications