திடீரென வந்த போன்.. "என்னாது, பாசிட்டிவா?" கடைக்கு வந்த பெண் தரையில் புரண்டு கதறிய பரிதாபம்.. வீடியோ

கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வந்ததால் சீன பெண் கதறி அழும் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

பீஜீங்: "என்னது? எனக்கு பாசிட்டிவா?" என்று கேட்டு கொண்டே பொது இடத்தில் தனக்கு கொரோனா உறுதி என்பதை அறிந்த பெண் ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுதும் தொற்று பீடித்து வருகிறது.. லட்சக்கணக்கானோர் இறந்துவிட்டனர்.. லட்சக்கணக்கானோர் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. லட்சக்கணக்கானோர் குணமாகியும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. மருந்துகள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. தொற்றை தடுக்கவும் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.. அதனால்தான் இந்த தொற்று குறித்த பயம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

Woman cries in public after finding out she is covid19 positive, video

இந்நிலையில் சீனாவில் ஒரு பெண் தனக்கு பாசிட்டிவ் என அறிந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார்... பீஜிங்கின் ஷாப்பிங் காம்பிளக்சுக்கு அந்த பெண் வந்துள்ளார்.. ஷாப்பிங் செய்து கொண்டே இருந்தபோது, திடீரென போன் வந்தது.. அப்போதுதான், கொரோனா பாசிட்டிவ் என்று சொல்லி உள்ளனர்.

இதனை கேட்டதும் அந்த பெண், "என்னது, பாசிட்டிவா" என்று அலறிக்கொண்டே அழுகிறார்... தரையில் புரண்டு அழுவதை பார்த்த அங்கிருந்தோர், விஷயத்தை புரிந்துகொண்டு டக், டக்கென விலகி செல்ல ஆரம்பித்தனர்.. இதை பார்த்ததும் இன்னும் கதறுகிறார் அந்த பெண்.

அந்த காம்ப்ளக்ஸ் வாசலில் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தவரை, சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் அழைத்து செல்கிறார்கள்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை ஷேர் செய்தும் வருகிறார்கள்... "நீங்க சீக்கிரமா குணமாயிடுவீங்க, தைரியமா இருங்க... மனத்திடத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்" என்று அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட்களை மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+