மிக குறைந்த உடை அணிகிறார்கள்.. பாலியல் வன்முறைக்கு அதுதான் காரணம்.. பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பெண்கள் குறைவான உடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு தற்போது வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் அதிபராக உள்ளார், கடந்த சில மாதங்களுக்கு பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் பாலியல் வன்புணர்வு குறித்து அவர் கூறிய பதில்கள் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்திற்குப் பாகிஸ்தான் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை

அந்தப் பேட்டியில் பெண்களின் உடைகள் பாலியல் வன்முறைகளைத் தூண்டுகிறதா என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஒரு பெண் மிகக் குறைந்த ஆடைகளை அணிந்தால், ரோபோக்கள் தவிர அனைத்து ஆண்கள் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் அடிப்படை. ஆனால், அது பாலியல் வன்முறையாக மாறுமா இல்லை என்பது ஒருவர் இருக்கும் சமூகத்தைப் பொறுத்து பாரும்.

பாதிப்பை ஏற்படுத்தும்

பாதிப்பை ஏற்படுத்தும்

இதுபோன்ற விஷயங்களை சமூகத்தில் யாருக்கும் இதற்கு முன் பாத்திருக்வில்லை என்றால் அது கண்டிப்பாக ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார். பாலியல் வன்முறைகளுக்குப் பெண்களும் அவர்கள் அணியும் ஆடைகளுமே காரணம் என்று கூறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இம்ரான் கானின் கருத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உடை

உடை

இந்நிலையில் தனது பழைய பேட்டி குறித்து இம்ரான் கான் தற்போது கூறுகையில், "நான் புர்கா கருத்தைக் குறிப்பிட்டே அப்படிச் சொன்னேன். இங்கு எங்கள் சமூகத்தில் டிஸ்கோக்கள் இல்லை, இரவு விடுதிகள் இல்லை. நாங்கள் வாழ்வது முற்றிலும் மாறுபட்ட சமூக வாழ்க்கை முறை. எனவே நீங்கள் சமூகத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது, அது வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றே நான் குறிப்பிட்டேன்" என இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டில் பாலியல் வன்முறை

பாகிஸ்தான் நாட்டில் பாலியல் வன்முறை


பாகிஸ்தான் நாட்டில் தினசரி 11 பாலியல் வன்புணர்வு புகார்கள் போலீசில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கு 22 ஆயிரம் பாலியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன இருப்பினும், வெறும் 77 பாலியல் குற்றவாளிகள் மட்டுமே அங்குத் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பாலியல் புகார்களில் 0.3% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+