உலகளவில் கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சம்.. சீனாவில் ஒரே நாளில் 1290பேர் உயிரிழப்பு
ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,810 ஆக உயர்ந்துள்ளது. இன்று (17) ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 5339 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் இன்று மட்டும் 1290 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
சீனாவில் டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகின் 206க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வெறும் 120 நாளில் பரவி உள்ளது. மார்ச் 17ம் தேதி இரவு நிலவரப்படி உலகம் முழுவதும் 22,26,941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் உலகம் முழுவதும் 49131 பேருக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,810 ஆக உயர்ந்துள்ளது. இன்று (17) ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 5339 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மிக அதிகபட்சமாக 1290 பேர் (வூகான் உள்ளிட்ட பகுதிகளில்) உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் சீனாவில்கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4632 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 351 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனாவில் இரண்டாவது முறையாக கொரோனா வேகமாக பரவுவதாக தெரிகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் இன்று ஒரு நாளில் 961 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 847 பேரும், இத்தாலியில் 575 பேரும், பெல்ஜியத்தில் 306 பேரும், ஸ்பெயினில் 163 பேரும் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications