For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை விட 3 மடங்கு பெரியது.. அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கியது.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை

Google Oneindia Tamil News

ரோனி: உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை இன்று அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கி கடலில் கலந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் சிறு சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் காரணமாக துருவ பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

10 மீ வரை பயணிக்கும் கொரோனா நீர்துளிகள்.. அறைகள் எப்படி இருக்க வேண்டும்.. அரசு புதிய வழிகாட்டுதல்கள்10 மீ வரை பயணிக்கும் கொரோனா நீர்துளிகள்.. அறைகள் எப்படி இருக்க வேண்டும்.. அரசு புதிய வழிகாட்டுதல்கள்

அதிலும் அண்டார்டிகாவில் நினைத்ததை விட வெப்பநிலை வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.

உடைந்தது

உடைந்தது

இதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனிப்பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஆகும். இது டெல்லியை விட மூன்று மடங்கு பெரியது. அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியை விட 80 மடங்கு பெரியது ஆகும். சாட்டிலைட் புகைப்படங்கள் உடைந்ததை உறுதி செய்துள்ளன.

எங்கு

எங்கு

அண்டார்டிகாவில் உள்ள ரோனி ஐஸ் மலை பகுதியில் இருந்து இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்து சென்றுள்ளது. இதன் பெயர் Iceberg A-76 என்பதாகும். தற்போது அர்ஜென்ட்டினா அருகே உள்ள வெட்டல் கடல் பகுதியில் இந்த பனிப்பாறை மிதந்து கொண்டு இருக்கிறது. இதன் நீளம் 170 கிலோ மீட்டர். அகலம் 25 கிலோ மீட்டர் ஆகும்.

வெப்பநிலை

வெப்பநிலை

அண்டார்டிகாவில் வெப்பநிலை உயர்ந்ததன் காரணமாக இந்த பனிப்பாறை உடைந்து உள்ளது. இது இன்னும் சில நாட்களில் சிறு சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன்பின் மொத்தமாக உருகி நீராக மாறிவிடும். இதனால் கடல் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

கடந்த வருடம் இதேபோல் அப்போது பெரிய பனிப்பாறையாக இருந்த A-68A உடைந்து நொறுங்கி, பின் சிறிய சிறிய பகுதிகளாக பிரிந்து மொத்தமாக கடலில் கரைந்தது. அதேபோல் மீண்டும் அதைவிட பெரிய பனிப்பாறை A-76 உடைந்துள்ளது. இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் பனிப்பாறை உடைப்புகளால் கடல் நீர் மட்டும் உயர்ந்து வருகிறது.

உயரும்

உயரும்

1880க்கு பின் இந்த நீர் மட்ட உயர்வு அதிகரித்துள்ளது. 1880க்கு பின் கடலின் நீர்மட்டம் சர்வதேச அளவில் 9 இன்ச் உயர்ந்துள்ளது. வரும் வருடங்களில் இது இன்னும் வேகமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவில்லை இது போன்ற சம்பவங்கள் தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

English summary
World largest Iceberg which is the three times size of Delhi breaks in Antarctica as due to climate change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X