For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Recommended Video

    கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

    ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அருகே உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக பக்தர்கள் அதிகம் பேர் கூடுவர். இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்கும் இந்த விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

    Kachchativu Festival begins with flag hoisting, less number of fishermen participated

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகக் குறைந்த அளவிலேயே மீனவர்கள் பங்கேற்றனர். சுமார் 80 மீனவர்கள் மட்டுமே ராமேஸ்வரத்தில் இருந்து திருவிழாவுக்குச் சென்றனர். அதேபோல இலங்கையில் இருந்தும் மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இன்று மாலை தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று, சிலுவைப்பாதை நடைபெற்ற பின்னர், நாளை (12 -03-2022) காலை மீண்டும் சிலுவைப் பாதை நடத்திச் சிறப்பு திருப்பலிகள் நடந்து முடிந்த பின்னர் கச்சத்தீவு திருவிழா நிறைவு பெற உள்ளது.

    இவ்விழாவில் தமிழக பக்தர்கள் நூறு பேர் கலந்து கொள்வர் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 76 பக்தர்கள் மட்டுமே சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய-இலங்கை மீனவர்கள் நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒலியை விட 3 மடங்கு வேகம்! பாக். நாட்டில் விழுந்த இந்திய ஏவுகணை! என்ன நடந்தது? மத்திய அரசு விளக்கம்ஒலியை விட 3 மடங்கு வேகம்! பாக். நாட்டில் விழுந்த இந்திய ஏவுகணை! என்ன நடந்தது? மத்திய அரசு விளக்கம்

    நாளை இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்புக் கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அதன் பின்னர் மாலை திருவிழா முடிக்கப்பட்ட பின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kachchativu St. Anthony's Temple Festival begins today: Tamil Nadu and Sri Lankan fishermen held talks about fisihing issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X