1300 ஆண்டுகள் பழமை.. வெண் கொற்றக் குடையுடன்.. காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால தேவி சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 1300 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் உள்ள குழம்பீசுவரர் கோயில் தெருவில் கால்வாய் அமைக்கும் பணியின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால மூத்த தேவி சிலை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் குழம்பீசுவரர் கோயில் தெருவில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது பழங்கால தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பூஜையும் செய்து வழிபட்டனர்.
இத்தகவல் உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினருக்கு தெரிந்து அவர்கள் அச்சிலையை பார்வையிட்டபோது, பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி சிலை என்பதையும் உறுதி செய்தனர். சிலை சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இச்சிலையானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உடையதாக உள்ளது. வெண் கொற்றக்குடையின் கீழ், கரண்ட மகுடத்துடன் காதில் பத்ர குண்டலமும், மார்பில் அணிகலன்களும் அணிந்தும், இடுப்பில் ஆடை அணிந்து அமர்ந்த நிலையிலும் உள்ளது. வலப்புறத்தில் காக்கை உருவமும், அதன் கீழ் மகன் மாட்டுத்தலை வடிவத்துடனும் உள்ளது.
பல்லவர் காலத்தில் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்தவர். சோழர் காலத்திய வழிபாட்டிலும் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாகவும் போற்றப்பட்டுள்ளார். அண்மையில் குழம்பீசுவர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் தொடங்கிய போது தங்க ஆபரணங்கள் நிரம்பிய பெட்டி ஒன்றும் இக்கோயில் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications