காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி: வலுவான 4 முனைப் போட்டி.. மக்கள் கருணையால் மகுடம் யாருக்கு கிடைக்கும்?
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, செய்யூர்(தனி), மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: மொத்த வாக்காளர்கள்- 17,32,946; ஆண் வாக்காளர்கள்- 8,46,016; பெண் வாக்காளர்கள்- 8,86,636; 3-ம் பாலினத்தவர்: 294.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி வரலாறு: நாடு விடுதலை அடைந்த காலத்தில் ஒரே ஒரு தேர்தல் காஞ்சிபுரம் தொகுதி என்ற பெயரில் நடைபெற்றது. அதன் பின்னர் செங்கல்பட்டு லோக்சபா தொகுதியில் உள்ளடங்கியதாக காஞ்சிபுரம் இருந்தது. 2009-ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் (தனி) தொகுதியாக உருமாறி தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) 3,30,237
ராமகிருட்டிணன்(அதிமுக) 3,17,134
தமிழ்வேந்தன்(தேமுதிக) 1,03,560
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கே. மரகதம் (அதிமுக) 4,99,395
ஜி. செல்வம் (திமுக) 3,52,529
மல்லை சத்யா(மதிமுக) 2,07,080
விஸ்வநாதன்(காங்கிரஸ்) 33,313
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
ஜி.செல்வம் (திமுக)6,84,004
மரகதம் (அதிமுக) 3,97,372
சிவரஞ்சனி (நாம் தமிழர்) 62,771
முனுசாமி (அமமுக) 55,213
2024-ம் ஆண்டு களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
ஜி.செல்வம் (திமுக)
ராஜசேகர் (அதிமுக)
ஜோதி வெங்கடேசன் (பாமக)
சந்தோஷ்குமார் (நாம் தமிழர் கட்சி)
https://tamil.oneindia.com/kancheepuram-lok-sabha-election-result-364/
காஞ்சிபுரம் தொகுதியில் என்ன தேவை? பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர்; ஆன்மீக நகரம்; கோவில்களுக்கும் பட்டு நெசவுக்கும் புகழ்பெற்ற இடம். ஏரிகளுக்கும் பெயர் பெற்ற நகரம். நெசவுத் தொழில்தான் பிரதான தொழில். பட்டு நெசவுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது தலையாய பிரச்சனை. காஞ்சிபுரம் தொகுதியில் மாமல்லபுரம் முதன்மை சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. அதே அளவுக்கு காஞ்சிபுரம் மாநகரை மேம்படுத்த வேண்டும்; ஏரிகள், சரணாலயங்களை மேம்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பு. காஞ்சிபுரம் தொகுதியை சிறந்த சுற்றுலா பகுதியாக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.
தற்போதைய தேர்தல் களம்: இம்முறை திமுகவின் சிட்டிங் எம்பி ஜி.செல்வம் மீண்டும் களம் காண்கிறார். இத்தொகுதியில் செல்வம் 3-வது முறையாக களம் காண்கிறார். அதிமுக ராஜசேகர், பாஜக கூட்டணியில் பாமகவின் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியின் சந்தோஷ்குமார் களத்தில் உள்ளனர். இம்முறை திமுக கூட்டணி பலமாக உள்ளது. கடந்த முறையே அதிமுக கணிசமான வாக்குகளை அறுவடை செய்தது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் இம்முறை அதிகமான வாக்குகளைப் பெறும் போது வெற்றி வேட்பாளரின் வாக்கு சதவீதம் குறையக் கூடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications