மின்னல் வேகத்தில் பறி போன உயிர்.. ஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம்

காஞ்சிபுரம் அருகே பஸ்-லாரி மோதியதில் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம்-வீடியோ

    காஞ்சிபுரம்: லாரி, பஸ்சுக்கு நடுவே நசுங்கி உயிரிழந்த ஆசிரியையின் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த 5-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூருக்கு அரசு பஸ் ஒன்று கிளம்பியது. நெல்வாய் கூட்டுரோடு ஜங்ஷனில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பிரேக் பிடிக்காத லாரி ஒன்று வேறு ஒரு பக்கத்திலிருந்து குறுக்கே வந்துள்ளது.

    Lady died in Road Accident in Kanchipuram

    அந்த லாரி உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. வேகமாக வந்த லாரி, பிரேக்கும் பிடிக்காத காரணத்தினால் தாறுமாறாக வந்து, அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மோதியது.

    பிறகு மோதிய அதே வேகத்திலேயே பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு பள்ளி ஆசிரியை மீதும் லாரி மோதியது. இதில் பஸ்ஸோடு சேர்த்து ஆசிரியையை லாரி நசுக்கியது.

    பஸ்ஸுக்கும் லாரிக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ஆசிரியை பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் பலனில்லை. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செங்கல்பட்டு மகிமை இல்லம் என்ற தனியார் பள்ளியின் டீச்சர் என்று கூறப்படுகிறது. பிரேக் பிடிக்காத லாரி பைக்குகள் மீது மோதியதில் பலரும் லேசான காயமடைந்தனர். பேருந்தோடு சேர்த்து பெண்ணை லாரி நசுக்கிய சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+