உபியில் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு வர முடியுமா? பாஜவுக்கு சவால் விடும் அன்புமணி ராமதாஸ்!
காஞ்சிபுரம் : அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாக இருக்கும் நிலையில், பா.ஜ.க ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தி ஆங்கிலத்தை தவிர தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு வர முடியுமா என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக 2.0 என புதியயுகம் கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்புகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாமக காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அன்புமணி ராமதாஸ்
கூட்டத்தில் அவர் பேசுகையில், " பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் மீது கட்சி பொறுப்பில் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் இருந்து நீக்கபடுவார்கள் என்றும்,
10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக கிடைக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார்.

வன்னியர் இடஒதுக்கீடு
இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியினர் பற்றி தெரியும்? பாமக கட்சியினரிடம் சொல்லியிருக்கிறேன் நிச்சயமாக சட்டம் நிறைவேறும் என்றும்,மதுவை அண்ணா ஏற்று கொள்வில்லை அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது நமது நோக்கம், பேரறிஞர் அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம் என பேசினார் .

நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் மூலம் வன்னியர்களுக்கு 10.5சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமான முடிவு எடுக்கும், தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்திற்க்குரியது, பா.ஜ.க ஆளும் உத்திரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா ???

இரு மொழி கொள்கை
நாட்டில் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாகும், மூன்றாவது மொழி சாத்தியமில்லை என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ. கே. மூர்த்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள்,மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் உள்ளிட 500க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துக்கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications