காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு கண்டிப்பாக உதவுவேன்.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. அதிரடியாக களமிறங்கும் சு.சாமி!

நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் கண்டிப்பாக அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் கண்டிப்பாக அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்து மதத்தை Rajinikanth பாதுகாத்தால் நான் உதவி செய்கிறேன்-சு. சுவாமி

    நேற்று நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன்.ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்

    ம.பியில் திருப்பம்.. காங். எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா.. 3 பேர் ரிசார்ட்டில்.. கலக்கத்தில் கமல்நாத்!ம.பியில் திருப்பம்.. காங். எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா.. 3 பேர் ரிசார்ட்டில்.. கலக்கத்தில் கமல்நாத்!

     சுப்பிரமணியன் சுவாமி

    சுப்பிரமணியன் சுவாமி

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் முழுமையாக அரசியலுக்கு வரட்டும். ரஜினி கமல் இணைவது அதிமுகவுக்கு பிரச்சனையாகுமா என்று சொல்ல முடியாது. முதலில் குழந்தை பிறக்கட்டும் அதன் பிறகு பெயர் வைத்துக் கொள்ளலாம். அவர் கட்சி தொடங்கிய பின்தான் அவரின் கொள்கை குறித்து பேசுவேன்.

    பாஜக மூத்த தலைவர்

    பாஜக மூத்த தலைவர்

    அதுவரை அவரை விமர்சனம் செய்ய முடியாது. அவர் ஆன்மீக அரசியல் செய்வேன் என்றுள்ளார். அவர் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் அது நல்லது. அவர் அப்படி இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன். ரஜினியும் கமலும் இணைவது குறித்து இப்போது பேச முடியாது. அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கட்டும் பிறகு பேசலாம்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன், பழைய சினிமா வசனங்களை பேசினால் எதிர்ப்பேன். இந்து மதத்திற்காக பேசினால் நான் ரஜினியுடன் இருப்பேன். ரஜினி பாஜகவின் கருத்துக்கு நெருக்கமாக இருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன், அவருக்கு ஆலோசனை வழங்க தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.

    சொந்தம் கொண்டாடினார்கள்

    சொந்தம் கொண்டாடினார்கள்

    வரிசையாக பாஜக தலைவர்கள் பலர் நடிகர் ரஜினிகாந்தை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். ரஜினிகாந்த் எங்கள் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். மத்திய அரசின் ஆட்சியை பாராட்டுகிறார் என்று கூறி வருகிறார்கள். பல வருடமாக சுப்பிரமணியன் சாமி ரஜினியை எதிர்த்து வந்தார். தற்போது அவரும் ரஜினிக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டார்.

    English summary
    I will help Rajinikanth If he safeguards Hindu religion says Subramaniyan Swamy in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X