டெல்லியில் முகாம்.. விரைவில் பாஜகவில் இணையும் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி? பரபர தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தற்போது டெல்லியில் உள்ளதாகவும், அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் விஜயதாரணி. இவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். விஜயதாரணியின் குடும்பம் பாரம்பரியான காங்கிரஸ் கட்சியின் குடும்பமாகும்.

இவரது தாய் பகவதி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக 1977 ல் பொறுப்பு வகித்தவர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருபவர் தான் விஜயதாரணி.
விஜயதாரணி கடந்த 2011ல் முதல் முறையாக விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த தொகுதியில் களமிறங்கி வாகை சூடினார். தற்போது 3வது முறையாக அவர் விளவங்கோடு எம்எல்ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபகாலமாக விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்து வருகிறார். கட்சி தலைமை மீது உள்ள கோபம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதாவது விஜயதாரணி தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை பெற முயன்று வந்ததாகவும், ஆனால் அவருக்கு அந்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக காங்கிரஸ் எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைந்தபோது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விஜயதாரணி போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அவருக்கு வாய்ப்பு மறுத்து வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட் கொடுத்தது. அந்த தேர்தலில் விஜய் வசந்தும் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார்.
இதனால் அன்று முதல் விஜயதாரணி காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜயதாரணி காங்கிரஸ் கட்சியை விட்டு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவுகிறது.
இந்நிலையில் தான் இதுபற்றி விஜயதாரணியை போனில் தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் சிலர் பேசியுள்ளனர். அப்போது அவர் தான் டெல்லியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற விவகாரம் தொடர்பாக டெல்லி வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாஜகவில் இணைய போவதாக பரவும் தகவல் பற்றி கேட்டதற்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில் அந்த தகவல் தனக்கு ஆச்சரியாக இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் விஜயதாரணி எம்எல்ஏ பாஜகவில் ஐக்கியம் ஆகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications