திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

Thirparappu falls

தற்போது சில நாட்களாக தொடர்ந்து மழையும் பெய்து வந்த நிலையில் அருவியில் தண்ணீரின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டுடன் மூன்று பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் நீராடி மகிழ்ந்து வருகின்றனர். இது போன்று அருகில் உள்ள நீச்சல் குளத்தில் தங்கள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

சிறுவர் பூங்காவிலும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும்
அருவியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா படகு துறைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகையால் இந்த பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+