தாத்தாவே தந்தையான கொடூரம்.. மகளையே கர்ப்பமாக்கிய தேங்காய் வியாபாரி! கிறுகிறுத்துப் போன கன்னியாகுமரி!
கன்னியாகுமரி: இப்படியும் நடக்குமா என்பது போல் தான் கன்னியாகுமரியில் அரங்கேறி இருக்கிறது அந்த சம்பவம் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியானது பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனால் அந்த சிறுமி குழந்தை பெற்றது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பெரும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேங்காய் வியாபாரி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மகளுடனும் வசித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமி திடீரென பிரசவ வலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு குழந்தை பிறந்ததும், மருத்துவமனை நிர்வாகம் வழக்கம் போல இந்த தகவலை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தெரிவித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது சிறுமியுடன் அவர் தந்தை மட்டும் இருந்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
மேலும், பிறந்த குழந்தையை அவர் தானாகவே அம்மா தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்பதாக கூறியுள்ளார். இதனால் தந்தையின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, சிறுமி கர்ப்பத்துக்கு காதலனே காரணம் என்று கூறினார். ஆனால் காதலனின் பெயரை எந்த சூழலிம் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
சிறுமி பிரசவம்
தொடர்ந்து கேட்டபோதும் அவர் சொல்லும் பதில்கள் முன்னும் பின் முரணாக இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியதோடு, தந்தையின் செயல்கள் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதனையடுத்து சிறுமியை பாதுகாப்பாக ஒரு காப்பகத்தில் தங்க வைத்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறுமி குழப்பமான மனநிலையில் இருந்ததால் அவருக்கு அடுத்தடுத்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மன அழுத்தத்தில் இருந்து மீண்ட சிறுமி போலீசாரிடம் துணிந்து தனக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் குறித்து தெரிவித்தார்.
மகளிடம் அத்துமீறிய தந்தை
அதாவது வீட்டில் தனியாக இருந்த தன்னை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் தான் அவர் கர்ப்பப்படைந்ததாக கூறியிருந்தார். தனது மகள் தன்னால் கர்ப்பமானதை அறிந்த தந்தை தனது மனைவிக்கும் மகனுக்கும் தெரியக் கூடாது என்பதற்காக அவரை ரகசியமாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும் தெரிவித்தார். தந்தையே தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதோடு வீட்டிலும் பிரச்சனை வரும் என்பதால்தான் தனது கர்ப்பத்திற்கு காதலன் தான் காரணம் என தான் முதலில் கூறியதாகவும் தந்தையை காப்பாற்றும் நோக்கிலேயே அவ்வாறு கூறியதாக சிறுமி சொன்னது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போக்சோ வழக்கு
தொடர்ந்து சிறுமியின் முழு வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு தந்தை மூலம் குழந்தை பெற்றது கன்னியாகுமரி பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் சிறுமியின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications