குமரியில் ஒரு "நாகர்கோவில் காசி!" காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.

அவ்வாறு பெண்களிடம் ஏமாற்றிய பணத்தில் சொகுசு கார்கள், சொகுசு பைக் மற்றும் ஆம்னி பேருந்து வாங்கியது அம்பலமாகியுள்ளது.

Kanyakumari man arrested for cheating student

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பாகோடு - பாளையங்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

இவர் புதுக்கடை, உண்ணாமலைக் கடை, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

மேலும் அவர்களிடம் இருந்து நகைகளை ஏமாற்றி பறித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஜெனிஷை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். விசாரணையில் இவர் எப்போதும் சொகுசு கார் மற்றும் சொகுசு இருசக்கர வாகனங்களில் வலம் வந்து, வசதி மிக்க மாணவிகள் மற்றும் பெண்களை குறிவைத்து காதலிப்பதாக நடித்து பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று, அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு நகைகள் மற்றும் பணங்களை பறித்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

மேலும் ஜெனிஷ், மாணவிகள் மற்றும் பெண்களிடம் பறித்த பணத்தில் சொந்தமாக ஆம்னி பஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்களும் வாங்கியதும் தெரிய வந்தது. விசாரணையில் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் ஊர் சுற்றிவிட்டு அவரிடமிருந்து 26 பவுன் தங்க நகையை அபகரித்ததாக சொல்லப்படுகிறது.

மாணவிக்கு ஜெனிஷின் சுய ரூபம் தெரிந்ததும், அவரை விட்டு விலகினாராம். உடனே அவரிடம் நகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் நகையை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதனை அடுத்து மாணவி புதுக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜெனிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருத்துவபுரம் பகுதியில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞரின் மனைவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் சுற்றிவிட்டு அவரிடம் இருந்து நகையை நைசாக பேசி பறித்துள்ளார்.

மேலும் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள வசதி மிக்க பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடமிருந்தும் நகை மற்றும் பணத்தை பறித்து உள்ளார். தொடர்ந்து மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வசதியானவர் என தெரிந்து கொண்டு, தினசரி அவர் பள்ளிக்கு செல்லும் போது சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை மாறி மாறி பயன்படுத்தினாராம்.

பின்னர் சிறுமியை அணுகி அவரை காதலிப்பதாக கூறி, அவரிடமிருந்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். மேலும் பலரை ஏமாற்றியதாக தெரிய வந்தது. அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் வாலிபர் ஜெனிஷை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார், ஜெனிஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை பார்க்கும் போது நாகர்கோவில் காசிதான் நினைவுக்கு வருகிறார். அவரும் இப்படித்தான் பல பெண்களை ஏமாற்றி காதல் மன்னனாக வலம் வந்து பல ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து அவர்களை மிரட்டிய நிலையில் கைது செய்யப்பட்டு சாகும் வகை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+