கன்னியாகுமரி ஏட்டு.. ஷாலினிக்கு குழந்தை பிறந்ததும் அப்படியொரு ட்விஸ்ட்.. கடைசியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவருடன் பெண்ணுக்கு குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், உதவுவது போல நெருங்கி பழகியிருக்கிறார் ஏட்டு ஒருவர்.. இதற்கு பிறகு நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள்தான் கன்னியாகுமரியை பரபரப்பாக்க விட்டது.. ஏட்டு மீது விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜோசப் மெசியா தாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்

கடந்த 2023-ம் வருடம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷாலினி கருங்கல் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றிய சாம்சன் (45), ஷாலினியின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். அன்றைய இரவே ஷாலினிக்கு வாட்ஸ்அப் கால் செய்து பரிவாக பேசியுள்ளார்.

"எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கறேன்" என்று ஷாலினியிடம் கூறியிருக்கிறார். இதனார் ஏட்டுவை அளவுக்கு அதிகமாக ஷாலினி நம்பினார். எப்போது பேசினாலும் ஆதரவாக இருப்பது போலவே சாம்சனும் பழகியுள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது.

ஷாலினியிடம் சாம்சன் சொன்ன பொய்

தனக்கு திருமணம் ஆகவில்லை என்று ஷாலினியிடம் சாம்சன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய ஷாலினியுடன் அவர் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் பலமுறை திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்கள்.. ஒரு கட்டத்தில் ஷாலினியின் வீட்டிலேயே தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் சாம்சன்.

இந்த நிலையில் ஷாலினி கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த சாம்சன், ஷாலினியின் கணவரை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரவழைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி வெளிநாட்டில் இருந்து வந்த ஜோசப் மெசியா தாஸ், ஒரு மாதம் ஊரில் தங்கிவிட்டு மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். பிறகு கர்ப்பமாக இருந்த ஷாலினியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உதவியுள்ளார் சாம்சன். ஷாலினிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

ஏற்கனவே கல்யாணம்

குழந்தை பிறந்த பிறகாவது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஷாலினி கேட்டுள்ளார். அப்போதுதான் சாம்சன், எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்..

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாலினி, "என் குழந்தைககு ஒரு வழி சொல்லுங்கள்" என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த சாம்சன், "நான் எஸ்.பி. தனிப்பிரிவில் பணியாற்றுவதால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் சொன்னால் எஸ்பியே கேட்பார்.. இன்னொருமுறை கல்யாண பேச்சை எடுத்தால், உன்னையும் குழந்தையையும் கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டினாராம்..

இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஷாலினி, குளச்சல் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு சாம்சன் மீது மிரட்டல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சாம்சன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு டிரான்ஸபர் ஆகி சென்றுவிட்டு அப்போது மறுபடியும் தற்போது கருங்கல் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக வந்து உள்ளார்... இந்த நிலையில் அவர்மீது பாலியல் வழக்கு பாய்ந்துள்ளது. ஆனால், ஏட்டு இன்னமும் தலைமறைவாகவே உள்ளார்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+