ஒரே வீட்டில்.. ஒரே சேலையில்! அவசரப்பட்ட ‘உமா’.. கூடவே சென்ற ‘வேணு’! பதைபதைத்துப் போன கன்னியாகுமரி!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த காதலன் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா கௌரி. 20 வயதான இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நாகர்கோயில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் இவர், மருங்கூரை சேர்ந்த 24 வயதான வேணு மோகன் என்ற இளைஞரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

நாகர்கோவிலில் அதிர்ச்சி
இவர் நாகர்கோவிலில் உள்ள மருத்துவ ஆய்வக நிறுவனத்தில் டிப்ளமோ படித்து வந்தார். இவர்களது காதலுக்கு வேணுமோகனின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், உமா கௌரியின் தாயார் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய போது மகள் உமா கௌரியும் காதலன் வேணு மோகனும் வீட்டில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டனர்.

தற்கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் கதறி அழவே, கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி ஆசாரித்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதோடு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உமாகவுரியும், வேணுமோகனும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஒருந்துள்ளது. இதனால் உமாகவுரி குடும்பத்தினர் நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நாகர்கோவிலுக்கு வந்த பிறகும் வேணுமோகன் உமாகவுரியுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ஒரே சேலையில் தற்கொலை
இந்த நிலையில் வேணுமோகன், உமாகவுரியிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வேணு மோகன் நாகர்கோவிலில் உள்ள உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் வேணுமோகன் உமா கவுரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த உமாகவுரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த வேணுகோபாலும் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications