மெழுகு டாலு நீ.. இன்ஸ்டா வலையில் விழுந்த டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்! தனி காட்டு பங்களாவில்.. ஷாக்!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து கடத்தி சென்று குடும்பம் நடத்திய திருப்பூர் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக்கை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்
Recommended Video
5-சவரன் நகை அறுபதாயிரம் ரூபாயுடன் மாணவியை கடத்தி சென்று சத்தியமாங்கலம் காட்டு பங்களா வீட்டில் குடும்பம் நடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார் மெக்கானிக் ஒருவர். இதனால் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் என பெண் குழந்தைகளை செல்லமாக வளர்க்கும் பெற்றோர் அவர்களை கண்காணிக்கவும் வேண்டும் என்கின்றனர் போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை அடுத்த அண்டலவிளை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14-வயதான மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்

சிறுமி மாயம்
கழிந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி வீட்டில் இருந்த 5-சவரன் தங்க நகை அறுபதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் செல்போணை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார். இது குறித்து தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் மாணவி மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் செல்போண் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் மாணவி கடைசியாக தொடர்பு கொண்ட செல்போண் எண்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.

பங்களா வீடு
அந்த செல்போண் எண் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இயங்குவது தெரியவந்தது. இதனையடுத்து திங்கள்கிழமை காலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்த போது மாயமான பள்ளி மாணவியும் வாலிபர் ஒருவரும் தனிமையில் இருந்த நிலையில் இருவரையும் பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்

இன்ஸ்டாகிராம் பழக்கம்
விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல்மேடு பகுதியை சேர்ந்த 22-வயதான லச்சி பிரபு என்பது பைக் மெக்கானிக் ஆன இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவிக்கும் பைக் மெக்கானிக் லச்சி பிரபுவுக்கும் தாய் இல்லாத நிலையில் இருவரும் உணர்ச்சி பூர்வமாக இன்ஸ்டாவில் உரையாடிய நிலையில் பழக்கம் காதலாக மாறி இருவரும் அடிக்கடி கன்னியாகுமரியில் சந்தித்து கணவன் மனைவி போல் தனிமையில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

நகை பணம்
கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த லச்சிபிரபு மாணவிக்கு போண் செய்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையுடன் வந்தால் இருவரும் எங்கேயாவது சென்று குடும்பம் நடத்தாலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறிய நிலையில் மாணவியும் வீட்டில் இருந்த 5-சவரன் தங்க நகை அறுபதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் அறையெடுத்து தங்கியுள்ளனர்.

போக்சோவில் கைது
இந்நிலையில் அடுத்த நாள் திருப்பூருக்கு சென்ற அவர்கள் நண்பர்கள் உதவியுடன் நகைகளை அடகு வைத்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்ததோடு அங்கேயே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லச்சி பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15-ஆயிரம் ரூபாய் மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டதோடு மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு லச்சி பிரபு வை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications