நாகர்கோவில் மளிகைக் கடைக்காரர் வீட்டில் 22 பவுன் தங்கம், 12 லட்சம் ரொக்கம் திருடு போனது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம் நகரில் உள்ள மளிகை கடைக்காரர் வீட்டில் 22 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் திருடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிடி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம் நகரை சேர்ந்த 45 வயதாகும் தினேஷ் என்பவர் கோட்டாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். தினேஷ் தினமும் காலையில் கடைக்கு சென்றுவிடுவார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு மனைவியும் மளிகை கடைக்கு வந்துவிடுவார்.. பின்னர் மதியம் சாப்பாட்டுக்கு தான் 2 பேரும் வீட்டுக்கு செல்வது வழக்கம் ஆகும்.

Nagercoil 22 sovereigns of gold and 12 lacks rupees in cash stolen from the home

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தினேஷ் வழக்கம் போல கடைக்கு சென்றுள்ளார். அவரது மனைவியும் அவரது வீட்டுக்கு சென்று விட்டு கடைக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் சாப்பாட்டுக்காக 2 பேரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. மேலும் பீரோவும் திறந்து இருந்த நிலையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. உள்ளே சென்று அவர்கள் பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12 லட்சத்தை காணவில்லை. இதனால் கலங்கி அழுத தம்பதி, உடனடியாக கோட்டார் போலீசில் புகார் அளித்தனர்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக தினேஷ் தனது புகாரில் கூறினார்.
அதன்பேரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினார்கள் ஆனால் கைரேகை எதுவும் போலீசுக்கு சிக்கவில்லை.

இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "திருட்டு நடந்ததாக கூறப்படும் வீட்டில் இதுவரை எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இந்த சம்பவம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் யார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால், சிசிடிவி கேமரா மாட்டுவது நல்லது. சிசிடிவி கேமராக்களை பொறுத்தாமல் விட்டுவிட்டால், அது திருடர்களுக்கு வசதியாக போய்விடும். இன்றைய சூழலில் ஓரளவு வசதி உள்ள மற்றும் நடுத்தர குடும்பத்தினர் எல்லாருமே வீடுகளில் சிசிடிவி கேமரா மாட்டுவது நல்லது. ஒருவேளை உங்கள் வீட்டு சிசிடிவியை உடைத்து திருடினாலும் பக்கத்து வீடு, பின்னால் உள்ள வீடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள். சிசிடிவி கேமராக்களே இல்லாத பகுதி என்பதால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக மாறிவிடும். ஏனெனில் யார் வந்து சென்றார்கள் என்பது தெரியாமல் குற்றவாளிகளை தேடுவது என்பது, கண்ணை கட்டிக்கொண்டு பாதையில் நடப்பதற்கு சமம். போலீசாரும் சிரமத்தையே சந்திப்பார்கள். எனவே சிசிடிவி கேமராக்களை மாட்டிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+