10வது முறையாக கன்னியாகுமரியில் களம் காணும் பொன்.ராதாகிருஷ்ணன்! பாஜகவின் ஸ்ட்ராங் ஏரியாவில் வெல்வாரா?
கன்னியாகுமரி: பாஜக சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். 10வது முறையாக குமரியில் களம் காண்கிறார் பொன்னார்.
தமிழ்நாட்டில் பாஜக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றான கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக தலைவர்கள் பலரும் முயன்று வந்தனர். தொடர்ச்சியாக 9 முறை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டுள்ளார்.

கடந்த 1991-ல் முதல்முறையாக பாஜக சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். கடைசியாக 2021-ல் நடைபெற்ற குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வரை அவரே களமிறங்கினார். இதில் 1999ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் நடைபெற்ற தேர்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றினார். தொடர்ந்து, 2014ல் மீண்டும் மத்திய அமைச்சர் ஆனார்.
பொன்.ராதாகிருஷ்ணன் வயது 70 ஐ கடந்துவிட்டதால், அவருக்கு இந்த முறை சீட் கிடைக்காது என்றும், பொன்னாரை ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் தானே குமரி தொகுதியில் இந்த முறையும் போட்டியிட விரும்பினார்.
குமரியை பூர்வீகமாக கொண்ட தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி ஆகியோரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற சீட் கேட்டு வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், தனக்கு சீட் உறுதி என்று, தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி இருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: எதிர்வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தின் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. மேலும் நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
மற்ற வேட்பாளர்களின் விவரங்கள்:
மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி)
கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்
நீலகிரி (தனி) - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி)
நெல்லை - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
ஆகியோர் போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை தற்போது அறிவித்துள்ளது. மீதம் உள்ளவர்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications