என் மேல தப்பில்லை.. ஷாரோன் சொன்ன "வார்த்தை!" அதான் கஷாயத்தில் விஷம் கலந்தேன்! காதலி பரபர வாக்குமூலம்
கன்னியாகுமரி: என்னுடனான உறவை முறித்துக் கொண்டால் உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என ஷாரோன் ராஜ் தன்னை மிரட்டியதால்தான் கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாக கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.
களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு கிரீஷ்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. மேலும் கிரீஷ்மாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். நல்ல பணக்கார இடம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

கிரீஷ்மா
பணத்திற்கு மயங்கிய கிரீஷ்மா, புது மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே ஷாரோன் ராஜை எப்படியாவது பிரிவது என கிரீஷ்மா முடிவு செய்துள்ளார். இதனால் ஷாரோன் ராஜிடம் ஜோதிடம் குறித்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

மூடநம்பிக்கை
அதற்கு ஷாரோன் மூடநம்பிக்கை என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷாரோனை உதறி தள்ளிவிட்டு பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் அவருடன் ஊர் சுற்றிய புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் அவரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. நாளை இதை வைத்து பிளாக்மெயில் செய்தால் என்ன செய்வது என்ற அச்சம் கிரீஷ்மாவுக்கு இருந்துள்ளது.

போட்டோக்கள்
இதனால் அவரை தனியாக சந்தித்த கிரீஷ்மா தன்னுடைய போட்டோக்களை போனில் இருந்து அழித்துவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு ஷாரோன் அதெல்லாம் முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த கிரீஷ்மா ஒரு நாள் ஷாரோனை வீட்டிற்கு வரழைத்துள்ளார். அங்கு வைத்து தனக்கும் இன்னொரு நபருக்கும் நிச்சயம் ஆனதை தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
இது ஷாரோனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து கோபமடைந்த ஷாரோன், என்னை காதலித்து விட்டு எப்படி இன்னொருவனை எப்படி திருமணம் செய்து கொள்வாய்? இன்னொருத்தனுடன் உன்னை சந்தோஷமாக வாழ விட்டுவிடுவேனா? எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என மிரட்டினாராம்.

வாய் தகராறு
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் கிரீஷ்மா பலே திட்டத்தை தீட்டியுள்ளார். அவர் ஷாரோனை சமாதானப்படுத்துவது போல் நடித்து, நான் உனக்கு வேண்டும் என்றால் ஒரு ஜூஸ் சவாலை ஏற்பாயா என கேட்டுள்ளார். இதை நம்பிய ஷாரோன் அவ்வளவுதானே ஏற்கிறேன் என சொல்லியுள்ளார்.

கசாயத்தில் பூச்சி மருந்து
உடனே கசாயத்தில் பூச்சி மருந்தை கலந்து ஷாரோனிடம் கொடுத்துள்ளார். இது வயிறு வலிக்கு நல்லது, எனக்கு வயிறு வலித்தால் இதைத்தான் குடிப்பேன், ஆனால் கொஞ்சம் கசக்கும் என கூறியுள்ளார். ஷாரோன் எனக்கு வயிறு வலி எல்லாம் இல்லை, எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் கிரீஷ்மா கட்டாயப்படுத்தி ஷாரோனுக்கு கொடுத்ததாகவே தெரிகிறது. இதையடுத்து மெல்ல மெல்ல ஷாரோனின் உடலுறுப்புகள் டேமேஜ் ஆகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications