Vilavancode By Election Results 2024 LIVE: விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பத் வெற்றி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் விளவங்கோடு காங்கிரஸின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, சமீபத்தில் மைலோடு கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி நாம் தமிழர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

கேரள எல்லைக்கு அருகே உள்ள இந்த தொகுதியில் மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதுவரை நடந்த 15 சட்டசபை தேர்தல்களிலும் இந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி 10 முறை வென்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சி வென்றது.
கடந்த 2011, 2016, 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி தொர்ந்து 3 முறை வென்றார். இவருக்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதைய இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளன.
2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
விளவங்கோடு சட்டசபை தொகுதியின் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலை வகித்து வருகிறார். மொத்தம் 20 சுற்றுகளில் தேர்தல் ஆணையத்தின் 7 சுற்றுகளின் எண்ணிக்கையின் படி தாரகை கத்பத் 34306 வாக்குகளை பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த நந்தினி 14300 வாக்குகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் பூத்தில் இருந்து வந்த தகவலின்படி தாரகை வெற்றி பெற்றுள்ளார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்
2001ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டி மோனி (மார்க்சிஸ்ட்)- 59,087
ஜீவராஜ் (திமுக)- 36,168
ஜெயராஜ் (மதிமுக)- 6,494
2006ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட்)- 64,532
பிராங்க்ளின் (அதிமுக)- 19,458
பொன் விஜயராகவன் (என்சிபி)- 13,434
2011 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ் விஜயதரணி (காங்கிரஸ்)- 62,898
ஆர். லீமாரோஸ் (மார்க்சிஸ்ட்)- 39,109
ஜெயசீலன் (பாஜக)- 37,763
2016 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
விஜயதரணி (காங்கிரஸ்)- 68,789
தர்மராஜ் (பாஜக)- 35,646
செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்)- 25,821
2021 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
விஜயதரணி (காங்கிரஸ்)- 87,473
ஜெயசீலன் (பாஜக)- 58,804
மேரி ஆட்லின் (நாம் தமிழர்)- 12,292












Click it and Unblock the Notifications