”மொத்தம் 20 ஆயிரம் டீ-சர்ட்” ராகுல் காந்தி டீ-சர்ட் விலை என்ன? கேஎஸ் அழகிரி சொன்ன விளக்கம்!
கன்னியாகுமரி: ராகுல் காந்தி அணிந்துள்ள டீ-சர்ட் விலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி நான்காவது நாளாக இன்று ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார். அவர் அணிந்திருக்கும் டீ-சர்ட் 40 ஆயிரம் ரூபாய் என பாஜக தரப்பில் இருந்து சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனிடையே நேற்று ராகுல் காந்தி அணிருந்திருந்த டீ ஷர்ட் குறித்து பாஜக விமர்சித்திருந்தது.
பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டீ-ஷர்ட்டின் விலை ரூ.41,257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டது.

கேஎஸ் அழகிரி பேட்டி
இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை மற்றும் கண்ணாடியின் விலை குறித்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கேஎஸ் அழகிரி, ராகுல் காந்தியின் டீ- சர்ட் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

ராகுல் நடைபயணம்
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ராகுலின் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் நினைத்து பார்த்ததைவிட லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் குவிந்தனர். அவரது கருத்துகளும், எளிமையும் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

திருப்பூர் பனியன் கம்பெனி
வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இந்தப் பயணத்தைத் தொடங்கவில்லை. இந்திய மக்களின் ஒற்றுமைக்காகத் தான் நடக்கிறார் என்று தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் காந்தியின் டீ - சர்ட் குறித்த கேள்விக்கு, திருப்பூரில் கோல்டன் ஐஸ் என்னும் கார்மெண்ட் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். நடைபயணத்திற்காக 20 ஆயிரம் டீ - சர்ட்களை அடித்தோம். இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டீ- சர்ட்டில் தலைவர்களின் படங்கள் போடப்பட்டுள்ளது.

ராகுல் டீ-சர்ட் விலை என்ன?
ராகுலுக்காக 4 டீ-சர்ட்கள் படங்கள் இல்லாமல் அடிக்கப்பட்டன. அது 40 ஆயிரமும் இல்லை. 4 லட்சமும் இல்லை. மோடிதான் ரூ.10 லட்சத்தில் கோட் அணிந்து உள்ளார். ராகுலைச் சந்தித்தவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications