கள்ளக்காதல், ஓட்டம், போலீசில் புகார்.. ரிப்பீட்டு..! மாநாடு படம் போல் குமரியில் மாயமான பெண்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு இரண்டாவது முறையாக கள்ளக்காதலுடன் மாயமான மனைவியை மீட்டுத் தரக்கோரி கணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், பழைய கார்களை வாங்கி விற்கும் டீலராக உள்ளார். இவருக்கும் சோனியாகாந்தி என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் ஆகியவையும் திருடுபோன நிலையில், அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் நன்கு தேடியபோது அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியாக மனைவி சோனியாகாந்தியும் மாயமாகி இருந்ததைக் கண்டு இடிந்து போனார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்து 2 மாதங்களாகியும் சோனியா குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், மோகன்ராஜ் மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும் கோவா கேரளா என மாரி அவர்கள் சுற்றியதால் சோனியா குறித்த தகவல் கிடைக்கவில்லை..
சுமார் 68 நாட்களுக்கு பிறகு கள்ளக்காதலன் மனோஜ் என்பவருடம் மாயமான சோனியா காந்தி டெல்லியிலிருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று, இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு கணவருடன் சோனியா செல்வதாக கூறினார். அதன்படி கணவர் மோகன்ராஜ் உடன் சோனியா காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஒரு மாதத்துக்கு மேல் கணவர், பிள்ளைகளுடன் இருந்த சோனியா காந்திக்கு செல்போன் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறிச் சென்ற சோனியா, பக்கத்து வீட்டில் போன் வாங்கி கள்ளக்காதலனை வந்து அழைத்து செல்லுமாறு கூறி மனோஜுடன் புல்லட்டில் ஏறி பறந்து விட்டதாக மோகன்ராஜ் மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
தனது மனைவி 2 பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு 12 பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்துடன் காணவில்லை எனவும், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் அழுது புலம்பிய அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜியின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தான் மனோஜ் என்பதும், அன்பாக பழகி மனைவியை அபகரித்தவரிடம் இருந்து மீண்டும் மீட்டுக் கொடுத்தால் அவரை ஏற்றுக் கொள்வதாக கூறி வருகிறார் மோகன்ராஜ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications