8வது படிக்கும் போதே கர்ப்பம்..குறுக்கே வந்த கெளசிக்! கொத்தாய் சிக்கிய குடும்பம்! கரூர் ஷாக் சம்பவம்!
கரூர் : கரூரில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில், தாய், தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது
கரூர் நகர காவல் சரகம், கரூர் சின்னாண்டாங்கோவிலிலில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுமி கரூரிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது கரூர் ஆத்தூர் பிரிவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கௌசிக்குமார் (எ) கௌசிக் என்பவர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுடையவர் என்று தெரிந்தும் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

சிறுமி கடத்தல்
மேலும் அவரை ஏமாற்றி கடந்த (29.09.2021)-ல் சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலில் வைத்து சிறுமி என்று தெரிந்தும் கௌசிக்குமாருக்கு அவரின் தாய் மற்றும் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர் மேலும் சிறுமியை கௌசிக்குமார் தந்தையான சரவணன் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தும், அப்போது கௌசிக்குமார் சிறுமியை பலமுறை பாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.

இளைஞர் கைது
இந்நிலையில் தனது மகள் வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தால் கடந்த (04.10.2021) அன்று கரூர் நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 09.10.2021 அன்று கௌசிக்குமார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

சிறுமி கர்ப்பம்
மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர் சிறுமி 5 - வாரம் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்தார்., கரூர் நகர கோட்ட துணை கண்காணிப்பாளர் இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்டதில் சிறுமி என்றும் பாராமல் திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர் கெளசிக்குமார் (எ) கெளசிக் உட்பட திருமணம் செய்து வைத்த தாய் சுமதி மற்றும் தந்தை சரவணன் உட்பட்ட மூன்று பேருக்கு இன்று தண்டனை வழங்கினார்.

சிறை தண்டனை
மூவருக்கும் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு மூவருக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்., குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது., இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications