பித்தரை சித்தராக மாற்றி.. கல்லா கட்டிய கரூர் கும்பல்! இப்போ ஆளே மாறி எப்படி இருக்கார் பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

கரூர் : கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையில் மனநலம் பாதித்த நபரை கடந்த 4 மாதங்களாக நெடுஞ்சாலை சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி வசூல் செய்தவர்களிடம் இருந்து மீட்டுள்ள நிலையில், தற்போது நலமடைந்த அவர் காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக சுப்பிரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு உடைகள் அணியாமல் மனநலம் பாதித்து நிர்வாணமாய் சுற்றி திரிந்து வந்தார்.

சாலையில் வருவோர் போவோரிடம் யாசகம் எடுத்து உணவருந்தி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து வந்துள்ளார்.

நிர்வாண சித்தர்

நிர்வாண சித்தர்

இந்நிலையில் சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரக் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். சுப்பிரமணியிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெடுஞ்சாலை சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், சமூக வலைதளம் மூலமாக வதந்தியை பரப்பியுள்ளனர் சில மர்ம நபர்கள்.

திடீர் சாமியார்

திடீர் சாமியார்

மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார். அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்திருந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இவரை காண்பதாக அப்பகுதியினர் கூறினர்.

பணம் வசூல்

பணம் வசூல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சித்தர் ஒருவர் நிர்வாணமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதாக தகவல்கள் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கில் இவரை பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவரை வைத்து நாகம்பள்ளியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் நித்தியா என்பவரும் மற்றும் ஓரிருவர்கள் சேர்ந்து பொதுமக்களிடம் ஏமாற்றி உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வருகிறார்கள் என புகார் எழுந்தது.

மீட்பு

மீட்பு

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

குணமடைந்தார்

குணமடைந்தார்

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வைத்து மோசடி கும்பல் ஆயிரக்கணக்கில் உண்டியல் பணத்தையும், கோவில் கட்ட வேண்டும் என பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுப்பிரமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 15 நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் பூரண குணம் அடைந்தார். இதனையடுத்து சுப்பிரமணியை தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+