நள்ளிரவில் கைது.. பொதுக்கூட்டத்தை தடுக்க திமுக முயற்சி.. மாஜி பரபர புகார்! கரூரில் தொடரும் பதற்றம்!
கரூர் : அதிமுக சார்பில் நடைபெற இருக்கும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்தவர்கள் யார்? கைது செய்யப்பட்டவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட தெரியவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலில் இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்தது. அதிமுக கவுன்சிலர் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றார்.
திமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், அதிமுகவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இது குறித்து புகார் மனுவை அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கண்டன பொதுக்கூட்டம் கரூரில் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்து வருகிறார்கள் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கவுன்சிலர் கடத்தல்
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் 5 முறை தள்ளிப்போன நிலையில், கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்று துணை தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த அதிமுக கவுன்சிலர் திருவிக கடத்தப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் காரில் வந்துகொண்டிருந்த அவர், மர்ம நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டு கடத்தப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே தேர்தலில் திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் தான் அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த ரெடி
இந்நிலையில், இந்த அராஜகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கரூர் மாநகரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கரூரில் பரபரப்பு நிலவி வருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "மாவட்ட அதிமுக அவைத்தலைவர், மாவட்ட துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிகவை என்னுடைய காரிலிருந்து கடத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அதன் பிறகு அவரைத் தவிர ஐந்து பேர் போட்டியிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றபோது காரை உள்ளே விடாமல் தடுத்து விட்டார்கள். அதற்கு முன்பு திமுக மேயரும், துணை மேயரும் திமுக கவுன்சிலர்களை கூட்டிக்கொண்டு சென்ற இரண்டு கார்கள் சென்றது. ஆனால் அதிமுக வேட்பாளரை உள்ளேயே விடவில்லை. இதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

எஃப்.ஐ.ஆர் போடவில்லை
அதன் பிறகு அவர்களை எல்லாம் பின்வழியாக கொண்டு போய் தான் தேர்தல் நடந்தது. ஆனால் அராஜகம் செய்த திமுக மீது எஃப்.ஐ.ஆர் போடவில்லை. நாங்களும் புகார் கொடுத்து விட்டோம். அராஜகம் செய்து, அடித்த திமுக மீது எஃப்.ஐ.ஆர் போடவில்லை. இந்த அரசைக் கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டன பொதுக்கூட்டம் அறிவித்தார். இந்த கண்டனக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அந்த கூட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர் உள்ளிட்ட பலர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

நள்ளிரவில் கைது
இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் வீட்டிற்கெல்லாம் நள்ளிரவில் சென்று கைது செய்கிறார்கள். நள்ளிரவில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நபரை நள்ளிரவில் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரைக் கைது செய்த போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்? யார் என்பது குறித்தும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் கேட்டால் இதில் எங்களுக்கு தொடர்பில்லை என்கிறார்கள். இதற்காக ஸ்பெஷல் டீம் போடப்பட்டுள்ளது, அவர்கள் தான் கைது செய்து இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். கைது செய்யப்பட்ட நபர் இதுவரை எங்கு இருக்கிறார் என்பதும் குறித்த தகவல் தெரியவில்லை.

எஸ்பி அலுவலகத்தில் புகார்
அதேபோல் கார்த்தி என்ற பையன் மீது கேஸ் இருக்கிறது, அவரைப் பிடிக்க முடியவில்லை என்பதற்காக அவரது அப்பாவை கைது செய்துவிட்டார்கள். அவர் இதய நோயாளி. இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். இந்த அராஜக செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. தொடர்ந்து, இதுபோன்ற செயல்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications