வந்ததே லேட்! இதுல ராங் ரூட் வேற! கேரவனுக்குள் விஜய் சென்றதால்தான் கூட்டம்.. டிஎஸ்பி விளக்கம்
கரூர்: கரூரில் பிரச்சாரத்திற்கு வந்த பிரச்சார வாகனம் ராங் ரூட்டில் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் டிஎஸ்பி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பரப்புரை இடம் வந்ததும் ஆதவ் ஆர்ஜுனாதான் இன்னும் முன்னேறிச் செல்லலாம் என்றார் என்றும் டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று காலை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி பரத்குமார், " 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எதை வைத்து கூறினீர்கள், விஜய்யை பார்க்க குழந்தைகள் வருவார்கள். மேலும் வார விடுமுறை, காலாண்டு விடுமுறை என்பதால் எப்படி குறைந்த அளவு கூட்டம் வரும் என கணக்கிட்டீர்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம், விஜய்யை பார்க்க அனைத்து தரப்பும் வருவார்கள். இதை ஏன் நீங்கள் (தவெக) முன் கூட்டியே கணிக்கவில்லை " என கேள்வி எழுப்பினார்.
மேலும் நீதிபதி, அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா. அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள். தவறு யார் மீது உள்ளது என சொல்லுங்கள் என நீதிபதி கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி செல்வராஜ் கூறுகையில், "தவெக கேட்ட லைட் ஹவுஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அனுமதி தரவில்லை. மேலும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் அன்று மார்க்கெட் பகுதிக்குள் அதிக மக்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.
விஜய் நேரத்தை கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்ததும் நான் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் "இன்னும் முன்னே செல்வோம்" என்றார்.
அது போல் முனுசாமி கோயில் பகுதியில் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். விஜய்யின் பரப்புரை வாகனம் ராங் ரூட்டில் சென்றது. கரூர் மேம்பாலத்தில் வரும்போதே வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். முனியப்பன் கோயில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார். அங்கேயே விஜய்யை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். இவ்வாறு கரூர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்தார்.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்!












Click it and Unblock the Notifications