கரூர் விவகாரம்.. தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு!
கரூர்: கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் இருவருக்கும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் இருவருக்கும் காவல் நீட்டிப்பு இல்லாமல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன்பின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதன்பின் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல்துறை, 2 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைத்தது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்ற காவல் முடிந்து, திருச்சி சிறையில் இருந்து காணொளி வாயிலாக மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது எஸ்ஐடி தரப்பில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், சிபிஐ இன்னும் விசாரணை அதிகாரியை நியமிக்காததால், வழக்கின் ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
சிபிஐ வழக்கை ஏற்கும் வரை அவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. இதையடுத்து தவெக தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஐடி கலைக்கப்பட்டதால், காவல் நீட்டிப்பு வழங்க கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் இறுதியாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் இருவருக்கும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications