உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நம்ம முதல்வர்! நாமும் அவர் போல் உழைக்கணும் -செந்தில்பாலாஜி
கரூர்: உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் நாமும் அவர் போல் உழைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
'கல்லூரிக் கனவு' எனும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.
அதன் விவரம் வருமாறு;

கல்லூரிக் கனவு
கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'கல்லூரிக் கனவு' எனும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் பேசினார்.

செந்தில்பாலாஜி பேச்சு
அப்போது அவர் கூறியதாவது, ''அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார். இதேபோல் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய போது, தமிழகத்திற்கான முதல்வராக நான் இருக்கிறேன், நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்''.

அரசுப் பள்ளி
''அரசுப் பள்ளியில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். மிகச் சிறந்த பள்ளியாக அரசுப் பள்ளிகளை உருவாக்கி வைத்துள்ளார் முதல்வர். 12,200 பேரும் சிறந்த முறையில் படித்து பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும். உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு நம்ம முதலமைச்சரே மிகச்சிறந்த உதாரணம்.''

50 ஆண்டு கால உழைப்பு
''ஒரு வருடம் 2 வருடம் அல்ல 50 ஆண்டு கால உழைப்புக்கு சொந்தக்காரர் முதலமைச்சர். அவர் போல் நாமும் உழைக்க வேண்டும் என தோன்றும். எந்த சூழலிலும் உயர் கல்விக்கு அழைத்துச் செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம். நான் அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications