கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகதிகள் முகாம் உள்ளே புகுந்த விஏஓ! இப்படியா? ஒரே கதறல்! அன்புராஜ்க்கு என்னாச்சு தெரியுமா? ஷாக் கரூர்

Google Oneindia Tamil News

கரூர் : பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசு அதிகாரிகளே தவறிழைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் கரூரில் நடந்திருக்கும் இந்த சம்பவம்.

அண்டை நாடான இலங்கையிலிருந்து பல ஆண்டுகளாகவே தஞ்சம் தேடி சொந்த நாட்டையும் மக்களையும் நிலத்தையும் விட்டு அகதிகளாக தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.

அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது அப்படி இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் ஒருவர் தான் தற்போது பரபரப்பு புகார் ஒன்றினை கூறியிருக்கிறார்.

மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா! மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா!

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முகாமில் இலங்கையில் இருந்து தஞ்சம் புகுந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த முகாமில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மற்றும் தனது பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இவருக்குத்தான் அந்த கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது.

அகதிகள் முகாம்

அகதிகள் முகாம்

கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தைகளும் அருகே விளையாடச் சென்று இருக்கிறார்கள். அப்போது அந்த பெண் மட்டும் தனியே வீட்டிலிருந்திருக்கிறார். இதனை பார்த்த அரவக்குறிச்சி வெஞ்சமாம் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் அன்புராஜ் என்பவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் தனியாக இருப்பதை பார்த்த அன்புராஜ் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்று இருக்கிறார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட முயற்சித்த போது இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். மேலும் தப்பித்தோம் பிழைத்தோம் என அன்புராஜ் அங்கிருந்து ஓடி இருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அருகில் வசிக்கும் மக்களிடம் கூறியிருக்கிறார்கள் இதை எடுத்து பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை அளித்த அருகில் வசித்தோர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

இது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கிராம நிர்வாக அலுவலரான அன்புராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிராம நிர்வாக அதிகாரி பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Police have arrested a village administration officer who tried to sexually harass a Sri Lankan Tamil woman near Karur and put him in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X