வேட்டி கிடக்கட்டும்.. எடப்பாடிதான் முக்கியம்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் முந்தியடித்த தொண்டர்!
கிருஷ்ணகிரி : நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பூங்கொத்து கொடுக்க முயற்சித்த போது தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்த நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் அந்தத் தொண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுப்பதிலேயே மும்முரமாக இருந்தார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்துள்ள ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு கூட செல்லாமல் ஆதரவாளருடன் ஆலோசனை நீதிமன்ற முறையீடு தேர்தல் ஆணைய வழக்கு என தீவிரம் காட்டி வருகிறார்.
அதே நேரத்தில் பழனி கோவிலில் தரிசனம் கொங்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என தொண்டர்களை சந்திப்பதிலும் திருமண விழாக்களில் கலந்து கொள்வதிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டி வருகிறார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்
கடந்த நான்கு நாட்களாக கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள சென்ற அவர் அங்கே இரு நாட்கள் இருந்தார். முதல் நாள் மாலை சேலத்தில் இருந்து பழனி வந்த அவருக்கு திண்டுக்கல் மாவட்ட இலையான தொப்பம்பட்டியில் இருந்து பழனி நகரம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
சாலையின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் கொடிகள் தோரணங்கள் என களை கட்டியது பழனி பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனையடுத்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.

உற்சாக வரவேற்பு
இதனையடுத்து மேற்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இபிஎஸ். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதாலும் கட்சிகளில் தங்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைக்க வேண்டும் என லோக்கல் நிர்வாகிகள் நினைப்பதாலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பூர்ண கும்ப மரியாதை பிளக்ஸ் பேனர்கள் போஸ்டர் என மாஸ் காட்டினர் மாவட்டச் செயலாளர்கள்.

வேட்டி அவிழ்ந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு அவரை வரவேற்று நிலையில் மேடை ஏறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுக்க உள்ளூர் நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அதிமுக நிர்வாகி ஒருவரின் வேட்டி மேடையிலேயே அவிழ்ந்து விழுந்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுப்பதுதான் முக்கியம் என கருதி அந்த தொண்டர் வேட்டியை ஒரு கையில் அள்ளி முடிந்து கொண்டு மற்றொரு கையில் பூங்கொத்தினை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications