11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தம்பிதுரை -கே.பி.முனுசாமி! எல்லாம் எடப்பாடி செய்த மாயமாம்!
கிருஷ்ணகிரி: 11 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக முக்கியப் பிரமுகர்களான தம்பிதுரையும், கே.பி.முனுசாமியும் ஒரே மேடையில் ஏறி கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள்.
தம்பிதுரையும், கே.பி.முனுசாமியும் ஆரம்பக்காலம் முதலே எதிரும் புதிருமாக அதிமுகவில் அரசியல் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பிதுரை, கே.பி.முனுசாமி திடீர் ஒற்றுமையின் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக போராட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று நடந்தது. கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு கே.பி.முனுசாமியும், தம்பிதுரை எம்.பி.யும் ஒரே மேடையில் ஏறி கட்சியினரை வியக்க வைத்தது தான் அது.

நேர் எதிர் துருவங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தம்பிதுரையும், கே.பி.முனுசாமியும் நேர் எதிர் துருவங்களக நின்று அரசியல் செய்து வருபவர்கள். ஜெயலலிதா காலத்திலேயே இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகாது என்பதால் தான் தம்பிதுரைக்கு கரூரில் சீட் கொடுத்து அங்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்ட இவர்கள் இப்போது இணைந்து செயலாற்றத் தொடங்கினாலும் அவர்களது ஆதரவாளர்களின் மனம் இன்னும் ஒட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பின்னணியில் எடப்பாடி
அதிமுக மூத்த தலைவர்களான தம்பிதுரையும், கே.பி.முனுசாமியும் இணைந்ததற்கு காரணம் எடப்படி பழனிசாமி எனத் தெரிவிக்கப்படுகிறது. தம்பிதுரையை பொறுத்தவரை பெரும்பாலான நாட்கள் சென்னையிலும், டெல்லியிலுமே இருந்து வருகிறார். அவரால் முன்பை போல் மாவட்ட அரசியலில் ஆக்டிவக இயங்க முடியவில்லை. இதனிடையே கே.பி.முனுசாமி வழக்கம் போல் மாவட்ட அரசியலில் கோலோச்சி வருகிறார்.

மாறி மாறி புகழாரம்
நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கே.பி.முனுசாமியை தம்பிதுரை புகழ்ந்து தள்ளியதை பார்த்த அதிமுகவினர், மனுஷன் எப்படி மாறிட்டாரு என கமெண்ட்கள் அடித்தனர். இதனிடையே கே.பி.முனுசாமியும் தம்பிதுரையை பதிலுக்கு புகழ்ந்து பேசினார். 11 ஆண்டுகளாக கீரியும், பாம்புமாக இருந்தவர்கள் ஒரு வழியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications