கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் நேரில் வராமல் காணொளியில் பிரச்சாரம் செய்ய இதுதான் காரணமாம்.. சொல்கிறார் பாஜக அண்ணாமலை

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெளியில் சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதை புரிந்துக்கொண்டு தான் முதல்வர் காணொளி வாயிலாக பிரசாரம் செய்கிறார் என ஒசூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Recommended Video

    இன்னும் 4 வருஷம் ஆட்சி தொடர்வது திமுக கையில் இருக்கு.. கரூரில் பாஜக அண்ணாமலை பேச்சு

    நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    கெலமங்கலம்,தேன்கனிக்கோட்டை ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் 12 பேர் என 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

    மேயர் கனவுடன் கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சேகரிக்கும் Ex அமைச்சர் மகன்! சூடுபிடித்த பிரச்சாரக் களம்! மேயர் கனவுடன் கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சேகரிக்கும் Ex அமைச்சர் மகன்! சூடுபிடித்த பிரச்சாரக் களம்!

    அண்ணாமலை பிரச்சாரம்

    அண்ணாமலை பிரச்சாரம்

    நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரவு 9.30 மணியளவில் பங்கேற்று உரையாற்றினார். பிரச்சார மேடையில் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், "8 மாத ஆட்சியில் திமுக தலைவர்களே விடியலை தேடி கொண்டிருக்கிறார்கள் நம்மை போன்றோருக்கு எப்படி கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை நடைப்பெற்ற ஊழல்களில் உடலை துன்புறுத்துவதாக இருந்ததில்லை கடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மெகா ஊழல் நடைப்பெற்றுள்ளது.

    பரிசில் மரத்தூள்

    பரிசில் மரத்தூள்

    பொங்கல் பரிசில் மஞ்சள் தூளிற்கு பதிலாக மரத்தூள் வழங்கி சாப்பிடுமாறு கூறி துன்புறுத்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தடுப்பூசி செலுத்தினால் கொரோனா போகுமா தடுப்பூசிக்கு சரக்கு மிடுக்கு உண்டா என கேள்வி எழுப்பினார், இந்தியாவில் உள்நாட்டு விஞ்ஞானிகள் மூலம் 172 கோடி தடுப்பூசிகளை தயாரித்து விமானம் மூலம் அனைவருக்கும் கிடைக்க செய்தோம்.

    நகைக்கடன் தள்ளுபடி

    நகைக்கடன் தள்ளுபடி

    ஆனால், 21 பொருட்களை விடியா அரசால் கொடுக்க முடியவில்லை இதுவே பாஜக விற்குமான வித்தியாசம்,

    திமுகவின் அரசு கையாளாகாத அரசு 7 வாக்குறுதிகளை கூட சரியாக செய்யவில்லை நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறி 73% பெண்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்கின்றனர்

    காணொலி பிரச்சாரம்

    காணொலி பிரச்சாரம்

    எந்த காரணம் கொண்டு திமுக தலைவர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர் என தெரியவில்லை.. அதனை புரிந்துக்கொண்ட முதல்வர் நேரில் சென்றால் பிரச்சனை என காணொளி பிரச்சாரம் செய்கின்றார்.. மோடியை போல சாதனை செய்திருந்து விட்டு காணொளி வாயிலாக ஓட்டு கேட்டிருந்தால் பரவாயில்லை என விமர்சித்தார்.

    English summary
    BJP state leader Annamalai in Hosur has said that the Chief Minister is campaigning through video only realizing that there will be trouble if he goes outside without fulfilling his promises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X