இது தான் காரணமா? கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட பாஜக புள்ளி! குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்!
கிருஷ்ணகிரி : திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி களி கண்ணன் கிருஷ்ணகிரியில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளது தனிப்படை காவல்துறை. 6 மணி நேரத்திற்குள்ளாக கொலையாளிகளை சந்தேகத்தின் பேரில் அடையாளம் கண்டு ஓசூர் பகுதியில் இருந்த நபர்களை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேப்பாளம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்குவாரிக்கு செல்லும் பகுதியில் நேற்று காலை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 52 வயது மதிக்கதக்க நபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி கொலையானது யார்?கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

பாஜக பிரமுகர்
அதில், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தவர், திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் களி கண்ணன் என்பது தெரியவந்தது. இவர், திருப்பத்தூர் நகர பாஜ துணை தலைவராக இருந்துள்ளார். அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையால் பரபரப்பு
கொலை சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தொழிலில் உள்ள முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? அவரை மர்ம நபர்கள் வேறு எங்கேயேனும் கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை இங்கு வீசிச்சென்றனரா? அல்லது ஊத்தங்கரை பகுதியில் வந்தபோது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர் விசாரணை
தொடர் விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 10 மணி அளவில் ஸ்கார்பியோ காரில் வந்த நபர்கள், தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த பாஜக பிரமுகர் களி கண்ணன் கடந்த ஒரு வருட காலமாக வீட்டிற்கு செல்லாமல் குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சனையின் காரணமாகவும் தனியாக தண்ணீர் கேன் விற்பனை செய்யும் அலுவலகத்தில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடூர கொலை
பின்னர் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம் பட்டி தனியார் கிரஷர் கம்பெனி அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நெஞ்சு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கொடூர முறையில் வெட்டி கொலை செய்து சடலத்தை ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம் பட்டி பகுதியில் வீசி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர் காவல்துறையினர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஹரி விக்னேஷை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வந்தனர்

6 பேர் கைது
இந்த நிலையில் ஹரி ஓசூர் பகுதியில் இருப்பதாக தகவல் தெரிந்து ஊத்தங்கரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற தனிப்படை காவலர்கள் அரி விக்னேஷ் உடன் பயணித்த மேலும் ஜந்து நபர்களையும் கைது செய்து 6 நபர்களையும் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த கும்பல் தான் களி கண்ணனை கடத்திக் கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹரி விக்னேஷ், நவீன், மணிகண்டன், ஆனந்த் , அருண்குமார், அருண் 6 நபர்களை தனிப்படை காவல்துறையினர் ஓசூர் பகுதியில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

என்ன காரணம்?
திருப்பத்தூர் நகர் இளைஞரணி பதவியில் இருக்கும் அரி விக்னேஷ் முதல் குற்றவாளியாகவும் அவனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நடந்த 6 மணிநேரத்தில் செல்போன் எண்ணை வைத்து சுற்றி வளைத்த காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில் ஹரிவிக்னேஷ் சில மாதங்களுக்கு முன் இதே இறந்த கலிகண்ணனை கொலை முயற்சி செய்ததில் கையில் காயங்களுடன் தப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பத்தூர் திமுக மாணவர் அணி பிரமுகரின் மகனான ஹரி விக்னேஷுக்கும் கலி கண்ணனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது போலீசார் கூறியுள்ளனர்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications