ஜி.யு.போப் கல்லறைக்கு ஒரு நேரடி விசிட் !- அசந்துபோன ஐ.ஏ.எஸ் அதிகாரி
லண்டன்: ஜி.யு,போப் பற்றியும் அவர் மொழிபெயர்த்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்தும் தமிழ்நாட்டில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் ஆளுநர் ரவி. இவரது கருத்துக்கு திமுகவினர் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் திராவிட நாகரிகம் குறித்து ஆய்வு செய்து வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது ஜி.யு.போப் கல்லறைக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

ஆச்சரியம் தந்த சந்திப்பு
"கடந்த மே மாதம்தான் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நகருக்குப் போயிருந்தேன். அங்குள்ள ஜெரிக்கோ பகுதியில் ஒரு கடைக்குச் சென்று விட்டுத் தங்கியிருந்த அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். தினமும் அந்த வழியாகத்தான் வருவேன். அன்றும் அப்படித்தான் வந்தேன். சாலையில் நின்றிருந்த ஒருவர், "வணக்கம்" என்றார்.
பக்கத்தில் ஒலித்த தமிழ்க்குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் நின்றவர் செலின் ஜார்ஜ். அவரை எனக்கு முன்பே தெரியும். குமரிமாவட்டத்தில் கல்லுக்கூட்டம் என்ற ஊரைச் சேர்ந்தவர். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பரப்புரைக் குழுவில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். அவர்தான் ஆக்ஸ்போர்டு சாலையில் என்னை எதேச்சையாகப் பார்த்து அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது.

யார் இந்த ஜி.யு,போப்?
நான் அவரை விசாரித்தேன். அவர், 'ஜி.யு. போப் கல்லறையைப் பார்க்க கனடிய தமிழ் இருக்கை தலைவர் சிவன் இளங்கோ இன்னும் கொஞ்ச நேரத்து வர இருக்கிறார். ஆகவே காத்திருக்கிறேன்.அது தொடர்பாகத்தான் ஆக்ஸ்போர்டு வந்திருக்கிறேன்" என்றார். உடனே நான் ஆச்சரியமான தொனியில் "ஜி.யு. போப் கல்லறை எங்கே இருக்கிறது"? என்று கேட்டேன். நான் ஒரு தமிழ் மாணவன். போப்பையும் திருக்குறளையும் கூர்ந்து படித்தவர்.
தமிழ் பண்பாடு, நாகரிகம் எனத் தொடர்ந்து ஆய்வு செய்து வருபவன். ஆகவே அந்தக் கேள்வியை சட்டென்று கேட்டேன். அவர் இன்னும் வியப்பை அதிகமாக்கும் தொனியில், "கல்லறைத் தோட்டத்தின் நுழைவாயிலில்தான் நாம் இருவரும் இப்போது நிற்கிறோம்" என்றார்.
நான் தினம் கடக்கும் சாலை அது. ஆனால் அந்தச் செய்தி எனக்குத் தெரியவில்லை. அடுத்த நிமிடமே போய் பார்ப்பது என முடிவு செய்தேன். அவர் எதிர் பார்த்துக் காத்திருந்த, சிவன் இளங்கோவும் லண்டனைச் சேர்ந்த சிவலீலனும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
உடனே நாங்கள் நால்வரும் ஜி.யு போப் கல்லறைக்கு சென்றோம். ஜி.யு,போப்பை வணங்கினோம். நிறைய புகைப்படம் எடுத்துக் கொண்டோம். தவிர்க்க முடியாமல் சென்னை மெரினாவில் உள்ள ஜி.யு. போப் சிலை எனக்கு நினைவுக்கு வந்தது.
தமிழுக்கு உண்மையில் தொண்டாற்றிய எவரையும் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்ததே இல்லை. அதனால்தான் தொன்மையான தமிழ்மொழி இன்றும் இளமையாய் இருக்கிறது. ஆக்கப்பூர்வமான நேர்மறையான உணர்வுகளில் தலையானது நன்றியுணர்வுதான். அந்த உணர்வு தமிழர்களிடம் நிறையவே இருக்கிறது.
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டுக் காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தூத்துக்குடி அருகே சாயர்புரம், தஞ்சாவூர்,உதக மண்டலம் ஆகிய இடங்களில் இறைப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி ஆற்றியவர்.

ஜி.யு.போப்புக்கு பிறந்த ஊரில் சிலை
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆக்ஸ்போர்டில் 1908 ஆம் ஆண்டு காலமானார்.
அங்கு தான் அவரது கல்லறை உள்ளது. கனடாவில் ஜி.யு போப் பிறந்த ஊரில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கனடா தமிழர்களிடம் ஒரு திட்டம் இருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் சிவன் இளங்கோ ஆக்ஸ்போர்டில் உள்ள போப் கல்லறையை பார்க்க வந்திருக்கிறார். அவர்களின் அழைப்பால் நானும் போப் கல்லறையைப் பார்க்க முடிந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது. போப் கல்லறையிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில்தான் தங்கியிருந்தேன் என்பதே எனக்கு தெரியாது. அதாவது செலின் ஜார்ஜ் என்னைச் சாலையில் அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தும் வரையில்.
அதற்கு பின்னர் ஒரு நாள் எனது மனைவி, மகள்கள், பேத்தியுடன் ஜி.யு போப் கல்லறைக்கு மறுபடியும் சென்றேன். ஜி.யு போப் கால்டுவெல் வீரமாமுனிவர் போன்றோரின் தமிழ்ப்பணி பற்றி எனது குடும்பத்தினருக்கு எடுத்து விளக்கினேன்" என்கிறார் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன்.

தமிழ் படித்த மாணவன்
போப் கல்லறையில் 'நான் ஒரு தமிழ் மாணவன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பலகாலமா ஒரு நம்பிக்கை தமிழ்நாட்டில் நிலவுகிறது. நீங்கள் பார்த்த கல்லறையில் அந்த வாசகம் இருந்ததா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
"அவரது கல்லறையில் அப்படி எழுதப்படவில்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு நெருக்கமான நபர்களிடம் அந்த விஷயத்தை முன்வைத்துள்ளார். முறைப்படி அவரது உயிலில் அப்படி எதுவும் கூறப்படாததால் எழுதப்படவில்லை" எனக் கூறும் பாலகிருஷ்ணன், தனக்கு ஜி.யு.போப் மீது நம்பிக்கை உள்ளது. அவரது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க முடியாது. போப் உள்ளுணர்வு உண்மையானது என்கிறார்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications