பகவத் கீதை தான் எனக்கு வலிமையை கொடுக்கிறது! பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் பேச்சு
லண்டன்: ‛‛பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல் கடும் சவாலாக உள்ளது. மிகவும் கடினமாக நேரங்களில் பகவத் கீதையின் போதனைகள் தான் எனக்கு வலிமையை கொடுக்கின்றன'' என் பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கூறியுள்ளார்.
Recommended Video
பிரிட்டன் பிரதமராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் கடந்த சில மாதங்களாக சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதையடுத்து அவரது அமைச்சரைவயில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கியது.

ரிஷி சுனக் போட்டி
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உள்பட ஏராளமானவர்கள் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் இறுதியாக ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதி போட்டியில் உள்ளனர். இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவர் தான் பிரிட்டனர் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இறுதி கட்ட பிரசாரம்
கருத்து கணிப்புகளில் துவக்கத்தில் ரிஷி சுனக் முன்னிலையில் இருந்த நிலையில் தான் தற்போது லிஸ் ட்ரஸ் முன்னிலை வகிக்கிறார். இருப்பினும் பிரதமர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்து விடும். இதனால் தேர்தலில் வெற்றி பெற ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

பகவத் கீதையால் வலிமை
இந்நிலையில் தான் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவையொட்டி ரிஷி சுனக் தனது மனைவியான அக்சதாவுடன் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் அங்குள்ள பக்தர்களுடன் கலந்துரையாடினார். இந்த வேளையில் ரிஷி சுனக் கூறுகையில், ‛‛பிரதமர் தேர்தல் கடும் சவாலாக உள்ளது. மிகவும் கடினமாக நேர்ங்களில் என் மனைவி அக்சதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போனில் அனுப்புவார். பக்வத் கீதையின் போதனைகள் எனக்கு வலிமையை கொடுக்கிறது. கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுத்து வருகிறது'' என கூறியுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த தாத்தா -பாட்டி
பிரிட்டன் பிரதமாக போட்டியிடும் ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பைசேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள். ரிஷி சுனக், அக்சதா மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications