அடேங்கப்பா! சைக்கிள் மலை தெரியுமா? - 500 சைக்கிள்களை திருடி குவித்து வைத்த 54 வயது கொள்ளையன் கைது
லண்டன்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நகரில் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்களை திருடி தனது வீட்டின் பின் பகுதியில் மலைபோல் குவித்து வைத்திருந்த 54 வயது கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சிலருக்கு சில விதமான பொருட்களை சேகரிப்பது பிடிக்கும். சிலர் நாணயங்களை சேகரிப்பார்கள். சிலர் பழங்கால பொருட்களை சேகரிப்பார்கள். சிலர் ஓவியங்களை சேகரிப்பார்கள்.
இந்திய முன்னாள் கேப்டன் தோனி கூட தனக்கு பிடித்தமான ஏராளமான பைக்குகளை சேகரித்து வருகிறார். இவர்கள் எல்லாம் சொந்த பணத்தை செலவு செய்து பிடித்த பொருட்களை சேகரிக்கிறார்கள்.

திருட்டு சைக்கிள்கள் சேகரிப்பு
ஆனால், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பகுதியை சேர்ந்த 54 வயது முதியவர் தனது வீட்டின் பின்புறம் அமைந்திருக்கும் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்களை மலைபோல் சேகரித்து வைத்துள்ளார். வீடுகள், கடைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களை அவர்களுக்கு தெரியாமல் நைசாக ஓட்டி வந்து வீட்டின் பின்புறம் குவித்து வைப்பது இவரது வாடிக்கை.

எலி தொல்லையால் வந்த பிரச்சனை
தொடர்ந்து சைக்கிள்களை திருடி வீட்டின் பின்புறம் வைத்ததால் 5 ஆண்டுகளில் அது மலைபோல் குவியத் தொடங்கி இருக்கிறது. இதனை அண்டை வீட்டாரும் சந்தேகத்துடன் பார்த்திருக்கின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள வீடுகளில் எலி தொல்லை அதிகரித்துள்ளது. இந்த சைக்கிள் மலை காரணமாகவே எலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகக்கூறி அவற்றை அகற்ற சொல்லி இருக்கின்றனர் அண்டை வீட்டார்.

உருக்கமான காரணம் சொன்ன கொள்ளையன்
அவர்களிடம் ஆப்பிரிக்காவில் வாழும் ஏழை எளிய குழந்தைகளுக்காகவே சைக்கிள்களை சேகரித்து வைத்து இருப்பதாகவும், விரைவில் ஆப்பிரிக்காவுக்கு சைக்கிள்களை அனுப்பிவிடுவேன் என்று என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக சில காலம் தாங்கள் அமைதியுடன் இருந்ததாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அந்த சைக்கிள்கள் இதுவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்கின்றனர்.

இரண்டாவது முறையாக கைது
சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 54 வயது நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார். 5 ஆண்டுகளாக இதுபோன்ற சைக்கிள்களை திருடி சேகரித்து வந்ததால் அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படவே அவர்கள் போலீசாரை நாடியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்குசென்ற போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூகுள் மேப்பில் தெரியும் திருட்டு சைக்கிள்கள்
கைதான நபர் திருடி குவித்து வைத்திருக்கும் சைக்கிள் மலை, கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் செயலிகளில் தென்படும் படங்களும் வெளியாகி இருக்கின்றன. போலீசாரின் இந்த கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கும் அப்பகுதி மக்கள், இனி தாங்கள் நிம்மதியாக இருப்போம் என்றும், அவர் திருடிய சைக்கிள்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications