பொம்மையுடன் உடலுறவு... ஆண்களை தவிர்த்துவிட்டு ரோபோவுடன் பெண்கள் பாலியல் உறவு.. கிர்ருனு தலை சுத்துதே

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இன்னும் 10 வருடத்தில் ஆண்களை விட ரோபோக்களுடன், பெண்கள் உடலுறவு கொள்வதற்கு விரும்புவார்கள் என்று பிரபல நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் தெரிவித்துள்ள கருத்து மிகப்பெரிய அதிர்வலையை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

சமீப காலமாகவே, கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டு வரும் வார்த்தைகளில் ஒன்றுதான் "Sex Toy".. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே புழங்கப்பட்டு வந்த இந்த பொம்மைகள், இந்தியாவிலும் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் செக்ஸ் பொம்மைகளை வெளிப்படையாக விற்பதற்கு சட்டப்படி தடை இருக்கிறது.

british toys ai

அதிக கிராக்கி: எனவே, மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் இருந்து செக்ஸ் பொம்மைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் இதற்கு ஏகப்பட்ட கிராக்கிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. செக்ஸுக்குத் துணைபுரியக்கூடியவை இந்த பொம்மைகள். ஆண்கள், பெண்கள் இரு தரப்புக்குமே தங்களின் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

அந்த காலத்தில், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக காலங்களில் இருந்தே இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான சான்றுகளும் உள்ளதாக சொல்கிறார்கள்.. இப்போ இந்த பொம்மைகளுக்கான டிமாண்டு கூடிக்கொண்டே செலகிறது.. காரணம், பாலியல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்து கொள்ள, இதுபோன்ற பொருட்கள் பலருக்கு வடிகாலாக அமைந்து வருகின்றன.. அதேபோல, பெண்களும் பல்வேறு காரணங்களுக்காக இந்த பொம்மைகளை பயன்படுத்துகிறார்கள்.

நுண்ணறிவு சாதனம்: இப்படிப்பட்ட சூழலில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனம், உலக அளவில் வியக்கத்தக்க தொழில்நுட்பமாக பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த AI-யால் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது என்று அதனை உருவாக்கும் நிபுணர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, வரும் காலங்களில், ஆண்களை விட ரோபோக்களுடனேயே பெண்கள் உடலுறவு கொள்வதற்கு விரும்புவார்கள் என்று பிரபல நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் தெரிவித்துள்ள கருத்துதான், மிகப்பெரிய பரபரப்பையும், கவனத்தையும் பெற்று வருகிறது..

ரோபாக்கள்: இது குறித்து இயன் பியர்சன் பிரிட்டிஷ் நாளிதழான தி சன் செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பியர்சன் சொல்லும்போது, "AI கொண்டு ஒரு ரோபோட்டை உருவாக்குவதால், அது இனி வரும் ஆண்டுகளில் ரோபோவின் பயன்பாடும் அதிகமாகும்., பெண்கள் அதிகமாக ரோபோக்களை காதலிப்பார்கள்.. ரோபோக்கள் உடனேயே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.. இன்னும் 10 ஆண்டுகளில் பெண்கள் ஆண்களை தவிர்த்து விட்டு ரோபோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

2025ம் ஆண்டுக்குள் பணக்கார குடும்பங்களில் ரோபோ செக்ஸ் கலாச்சாரம் உருவாகி விடும். மேலும், 2050-ம் ஆண்டுகளில் ரோபோ செக்ஸ் சாதாரண ஒரு உடலுறவு போல பழகிவிடும். மேலும், ரோபோக்கள் மனிதர்களுடன் புதுவிதமான அன்பை உருவாக்கும். இது அப்போது என்னதான் நடைமுறையில் இருந்தாலும், பாலுணர்வு கொண்ட உடலுறவுக்கு அப்போது மதிப்பு இருக்கும்" என்று என டாக்டர் இயன் பியர்சன் தெரிவித்துள்ளார்..

ஆபாச பொம்மைகள் : டாக்டரின் இந்த பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் தந்து வருகிறது.. இவரது கருத்தை பலரும் நிராகரித்து வந்தாலும், ஒரு சிலர் மட்டும் ஆதரவு தந்து வருகிறார்கள்.. "ஆபாச ரீதியாக விற்கப்படும் பொம்மைகள் (Sex Toys) போன்றவற்றின் தேவை குறையலாம், பாலியல் தேவைக்கென இருக்கும் தொழில்கள் இதனால் குறையலாம் என்பதால், டாக்டர் இயன் பியர்சன் சொல்லும் கணிப்பு சரிதான் என்கிறார்களாம். இது தொடர்பான விவாதமும் சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+