அப்படி போடுங்க.. ஒர்க் ஃப்ரம் ஹோம் சட்ட உரிமையாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய நெதர்லாந்து
லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நெதர்லாந்து நாட்டில் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது என்கிற அம்சம் கொண்ட புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெரும் முதலாளிகள் பலர் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மசோதா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மறுப்பவர்கள் பணியிலிருந்து வெளியேறலாம் என்றும் மிரட்டும் தொனியில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் டச்சு நாடாளுமன்றத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இரு அவைகளில், கீழ் அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் சட்ட ரீதியான உரிமையாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு சட்டமாக்கப்பட்டால், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை சட்டமாக்கிய முதல் நாடு என்கிற அந்தஸ்த்தை நெதர்லாந்து பெரும். இந்த சட்டம் மனிதர்களின் வாழ்வாதாரத்தை சமனாக வழிநடத்தி செல்ல உதவும் என்றும், இதன் மூலம் அவசியமற்ற பயணங்களையும் குறைக்க முடியும் எனவும் இந்த மசோதாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய சென்னா மாடூக் கூறுகிறார்.
ஏற்கெனவே இந்நாட்டில் அமலில் உள்ள வேலை சட்டம் 2015ல் சில மாற்றங்களைதான் இந்த மசோதா மேற்கொள்ள வழிவகை செய்கிறது. இந்த திருத்தம் மூலம் தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம், வேலை செய்யும் இடம் உள்ளிட்டவற்றை மாற்றிக்கொள்ள முடியும். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை நெதர்லாந்து ஏற்கெனவே சிறப்பாக அமல்படுத்தி வருகிறது. தற்போது இந்த புதிய மசோதாவை சட்டமாக்குவதன் மூலம் இந்நாடு தொழிலாளர் நலச்சட்டங்களை இயற்றுவதில் புதிய உச்சத்தை எட்டும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்த சட்டம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பு ஏதும் இல்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஐரோப்பிய ஆணையத்தின் பொது இயக்குநகரங்களில் ஒன்றான யூரோஸ்டாட் (Eurostat) தகவல்படி, இந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்தே 14 சதவிகித ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்து வருகின்றதாக கூறப்படுகிறது. எனவே இந்த புதிய சட்டம் பெரும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications