லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்ப நிலை உயர்வு! தானாக தீப்பிடித்த தண்டவாளம்! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அரசும் 2 நாட்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுத்துள்ளது.

எப்போதும் குளிரான காலநிலையே நிலவும் இங்கிலாந்து நாட்டில், தற்போது தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் கடுமையான வெயில் தாக்கத்தில் சிக்கியுள்ளது. அங்கு வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில், இங்கிலாந்து நாட்டில் நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. அணல் பறக்கும் காலநிலையால், வெப்பத்தை தாங்கமுடியாமல் மக்கள் நீச்சல் குளங்கள், தண்ணீர் பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர்.

காவிரி ஆற்றில் பெருகும் வெள்ளம்..மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக உயர்வு - விரைவில் நிரம்பும் காவிரி ஆற்றில் பெருகும் வெள்ளம்..மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக உயர்வு - விரைவில் நிரம்பும்

 அனைத்து வயதினரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

அனைத்து வயதினரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

கடந்த 11-ந் தேதி லண்டனின் விக்டோரியா நகரில் உள்ள ஒரு மரக்கட்டையினால் ஆன ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தால் தானாக தீப்பிடித்ததே அங்கும் நிலவும் வெப்பநிலைக்கு உதாரணமாக சொல்ல முடியும். வெப்ப உஷ்ணத்தால் அங்குள்ள தண்டவாளம் தீப்பிடித்து எரியும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்து குறிப்பிடித்தக்கது. இப்படி வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக மிக கடுமையாக வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் லண்டனுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேலே செல்லும் என்பதாலும் அனைத்து வயதினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இங்கிலாந்தில் இதுவே முதல் முறை

இங்கிலாந்தில் இதுவே முதல் முறை

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகரி கிரஹாம் மட்ஜே கூறுகையில், 'திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிகக்கடுமையான வெப்பம் இருக்கும். எனவே இந்த 2 நாட்களுக்கு நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதுபோன்ற சிவப்பு எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் முறையாகும். லண்டனில் இருந்து மான்செஸ்டர், வேல் ஆஃப் யார்க் வரையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த எச்சரிக்கை லண்டனில் இருந்து மான்செஸ்டர் வரையிலும் பின்னர் வேல் ஆஃப் யார்க் வரையிலும் ஒரு பகுதியை உள்ளடக்கியது. 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்ப நிலை பதிவாகும் பட்சத்தில் பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் தற்போது நம்மிடம் (இங்கிலாந்திடம்) உள்ளது என்பதை காட்டுவதாக அமையும்" என்றார்.

 மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்

மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்

வெப்ப நிலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது அதிகாரிகள் கூறுகையில், "நமது வாழ்க்கை முறைகளும் உள்கட்டமைப்புகளும் வரவிருக்கும் வெப்ப நிலைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, நாங்கள் விடுக்கும் எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை தவிர்த்து விடுங்கள், உங்கள் வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள். பயண திட்டங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தியுள்ளனர்.

 ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்படும்

ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்படும்

அதீத வெப்பத்தால் உபகரணங்கள் செயலிழப்பு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால், செல்போன் சேவை, மின்வெட்டு ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாலை வழி போக்குவரத்து, ரெயில், விமான போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அவசர நிலைக்கு நிகராக மாற்று திட்டங்களையும் வகுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

English summary
UK Met officials issued a red warning for extreme heat for coming Monday and Tuesday. They advised people avoid unnecessary plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X