இது ‘நாத்தம்’ புடிச்ச நியூஸ்.. படிச்சா குமட்டிக்கிட்டு வாந்தி வரலாம்.. பீ கேர்புல்!
தனது துர்நாற்றமிக்க சாக்ஸ்களை விற்று லண்டனில் ஒரு இளைஞர் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
லண்டன்: அதிக துர்நாற்றம் வீசும், தான் பயன்படுத்திய பழைய ஷூ சாக்ஸ்களை விற்று இளைஞர் ஒருவர் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பாதித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்...
சகிக்க முடியாத நாற்றங்களில் ஒன்று ஷூ சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றம். அலுவலங்கங்கள், பொது இடங்களில் தப்பித்தவறி யாராவது ஷூவைக் கழற்றி விட்டால், அதில் இருந்து வரும் துர்நாற்றம் அங்கிருப்பவர்களை அனிச்சையாக மூக்கை மூட வைத்து விடும். அவ்வளவு அருவருக்கத்தக்க மணமான அதையும் விலை கொடுத்து வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை.
அதோடு, இதையும் ஒரு தொழிலாக மேற்கொண்டு, துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்களை விற்றே ஒரு இளைஞர் லண்டனில் லட்சாதிபதியாகியுள்ளார்

இணையத்தில் பிரபலம்
லண்டனை சேர்ந்த 25 வயதான பில்லி ஜோய் கிரேவும், அவரது மனைவியும் டிக்டாக், யூடியூப் என சமூகவலைதளத்தில் பிரபலம். ஒன்லி பேன்ஸ் என்ற தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்தத் தம்பதி, விசித்திரமான ரசனையுள்ளவர்களுக்கென பிரத்யேகமாக வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனாலேயே இவர்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம்.

விசித்திரமான ரசனை
பில்லி மாதிரியே அந்த ரசிகர்களும் விசித்திரமான ரசனை உடையவர்கள். பில்லி பயன்படுத்திய பழைய ஷாக்ஸ்கள் மற்றும் உள்ளாடைகளை அதிக விலை கொடுத்து வாங்குவதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பில்லி, தனது பழைய சாக்ஸ் மற்றும் உள்ளாடைகளை இணையத்தில் விற்பதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
புதிய சாக்ஸ்களை வாங்கி அதனை பல நாட்கள் கால்களில் மாட்டிக் கொண்டு அலைவாராம் பில்லி. பின் அதனை அதன் துர்நாற்றம் போய் விடாமல், ஒரு ஜிப்லாக் கவரில் போட்டு எடுத்து வைத்து விடுவாராம். தனது சாக்ஸ் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்ற புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து விடுகிறார் பில்லி. அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ஆர்வமாக அதனை வாங்க விரும்புகின்றனர் அவரது ரசிகர்கள்.

நாற்றத்திற்கு தக்க விலை
ஒரு ஜோடி பழைய சாக்ஸை இந்திய மதிப்பில் ரூ900 முதல் ரூ2900 வரை விற்பனை செய்கின்றனர். வாரத்திற்கு நான்கு முதல் 12 ஜோடி சாக்ஸ்களை அவர் விற்பனை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சாக்ஸ் மட்டுமில்லாமல், ஜிம் டாப்ஸ், பாக்ஸர்கள் ஆகியவற்றையும் அவர்கள் விற்பனை செய்கின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு துர்நாற்றம் அதிகமாக இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல விலையையும் அதிகமாக நிர்ணயிக்கின்றனர்.

வாடிக்கையாளர்கள்
ரசிகர்களும் அதனைப் போட்டிப் போட்டு வாங்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் பில்லி மாதம் 1,600 பவுண்ட் சம்பாதித்து வருகிறார். இந்திய மதிப்பில் இது மாதம் ரூ1.5 லட்சம் ஆகும். கடந்த வருடம் தான் இந்த ஒன்லி பேன்ஸ் பக்கத்தை ஆரம்பித்துள்ளார் பில்லி. நாளுக்கு நாள் அவரது பக்கத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். புதிய வாடிக்கையாளர்களைப் போலவே பழைய வாடிக்கையாளர்களும் திரும்பத் திரும்ப பில்லியிடம் பழைய சாக்ஸ்களை வாங்கிச் செல்கிறார்களாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications