லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணி எலிசபெத் மறைவால் முடிவுக்கு வந்த குடும்ப சண்டை! நேரடியாக ஃபோன் செய்த மன்னர்.. இணைந்த சகோதரர்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் மறைந்துள்ள நிலையில், சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் நாட்டில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த இவரது உடல்நிலை வயது மூப்பு காரணமாக மோசமடைந்து வந்தது.

96 வயதான எலிசபெத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே, நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு வந்தார். இந்தச் சூழலில் அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மதுரை அன்பு 'ஐடி’ ரெய்டு! ஏ.கே. மட்டுமில்ல.. எஸ்.கே. பட ஷூட்டிங்கும் நிறுத்தம் - 'மாவீரன்' வருவானா? மதுரை அன்பு 'ஐடி’ ரெய்டு! ஏ.கே. மட்டுமில்ல.. எஸ்.கே. பட ஷூட்டிங்கும் நிறுத்தம் - 'மாவீரன்' வருவானா?

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத் உயிரிழக்கும் போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் ராணி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனை விரைந்தனர். ஆனால், ஒரு நபர் மட்டும் மிஸ்ஸிங். அது தான் புதிய மன்னர் சார்லஸின் இரண்டாவது மகன் ஹாரி. கனடாவில் வசித்து வரும் ஹாரி ராணி உடல்நிலை குறித்துத் தெரிந்ததும், பிரிட்டன் புறப்பட்டார்.

ஹாரி

ஹாரி

அப்போதும் கூட ஹாரி மட்டுமே பிரிட்டன் சென்றார். அவரது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்லவில்லை. இருப்பினும், சில மணி நேரங்களில் ராணி எலிசபெத் உயிரிழந்துவிட்ட நிலையில், மேகனும் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார். இருப்பினும், ராணி எலிசபெத்திற்கு இறுதிச்சடங்கு நடக்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அதுவரை ஹாரி- மேகன் தம்பதி அங்கு இருப்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

மோதல்

மோதல்

ஏனென்றால் ஹாரி- மேகன் தம்பதி ஏற்கனவே அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறி இருந்தனர். சார்லசின் இரண்டாவது மகனான ஹாரி, அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்து கொண்டார். அது ராணிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், குடும்ப நிகழ்ச்சிகளில் மேகன் புறக்கணிக்கப்படுவதா தெரிவித்து இருந்தார். மேலும் இனவெறி புகாரையும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சகோதரர்கள்

சகோதரர்கள்

அதேபோல சார்லஸின் மகன்கள் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே பல ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.. சகோதரர்கள் என்றாலும் கூட தாயார் டயானா நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் வில்லியம் மற்றும் ஹாரி சந்தித்துக் கொள்ளவில்லை. இதனால் ராணியின் இறுதிச் சடங்கு வரை ஹாரி- மேகன் தம்பதி பிரிட்டனில் இருப்பார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விரைவில் கனடா திரும்ப உள்ளதாகவும் கூட தகவல் வெளியானது.

மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ்

ராணி எலிசபெத்திற்கு இறுதி மரியாதை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இதனால் புதிய மன்னர் சார்லஸே நேரடியாக இளவரசர் வில்லியமிற்கு கால் செய்துள்ளார். ராணியின் இறுதிச் சடங்கில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால் உங்கள் பிரச்சினையைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

இறுதி மரியாதை

இறுதி மரியாதை

அதன் பின்னர் இரு சகோதரர்களும் சம்மதித்து உள்ளனர். ராணி உயிரிழந்த நிலையில், பக்கிங்காம் அரண்மனை முன்பு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்துவார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிகழ்வில் தான் இரு சகோதரர்களும் ஒன்றாகக் கலந்து கொண்டு உள்ளனர். இரு சகோதரர்களையும் ராணியின் மறைவு ஒன்றிணைத்து உள்ளதாக அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாமதம்

தாமதம்

அதிலும் இருவரும் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சி 45 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. அரசர் சார்லஸ் தனது மகனிடம் ஃபோன் மூலம் சதமானம் செய்துள்ளார். நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை காரணமாகவே இந்த கால தாமதம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Princes Harry and William reunited for Queen elizabeth death: Queen elizabeth funneral Princes Harry to attend along with his wife
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X