லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தீராத மனவேதனை.. எனக்கு மிகப்பெரிய கற்றல் பாடம்!" தந்தை மரணம் குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

லண்டன்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது தந்தை ராஜிவ் காந்தி மரணம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டன் சென்றுள்ளார்.

“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?

அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளரும் டாக்டர் ஸ்ருதி கபிலாவுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது ராஜிவ் காந்தி மரணம் குறித்து சில முக்கிய கருத்துகளை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.

 ராஜிவ் காந்தி படுகொலை

ராஜிவ் காந்தி படுகொலை

இந்த உரையாடலில், ​​மே 1991இல் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜிவ் காந்தி நினைவு நாள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் படுகொலை என்பது தனது வாழ்க்கையின் மிகப் பெரிய கற்றல் அனுபவமாக இருந்ததாகத் தெரிவித்தார். வாழ்க்கையில் வேறு எப்படியும் கற்க முடியாத சில விஷயங்களை இந்த நிகழ்வு கற்றுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 மிகுந்த வலி

மிகுந்த வலி

ராஜிவ் காந்தி குறித்த கேள்வி கேட்கப்பட்ட உடன் ராகுல் காந்தியால் பதில் எதையும் கூற முடியவில்லை. சில நிமிடங்கள் வரை மவுனமாக இருந்த ராகுல் காந்தி கூறுகையில், "என் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் பாடம் என்பது என் தந்தையின் மரணம். அதை விடப் பெரிய அனுபவம் எனக்கு வேறு எதுவும் இல்லை. எனது தந்தையைக் கொன்ற அந்த நிகழ்வு எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஒரு மகனாக நான் என் தந்தையை இழந்தேன். அது மிகவும் வேதனையானது.

 கற்றல் பாடம்

கற்றல் பாடம்

ஆனால், அதே நிகழ்வுதான், நான் ஒருபோதும் கற்றுக் கொள்ளாத முடியாத சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது. எனவே, நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் வரை, சுற்றி இருப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் கற்றுக் கொள்ள முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

 இரு கோணங்கள்

இரு கோணங்கள்

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தாக்கி பேசும் போது, அவர் மிகவும் கொடூரமானவர் என்று நினைத்துக் கொள்ளலாம். இதை இப்படிப் பார்ப்பது ஒரு விதம். அதேநேரம் அவரிடம் இருந்து வேறு சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று கோணத்திலும் அதைப் பார்க்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

அரசியல்

அரசியல்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, "இது ஒரு கடினமான வேலை. நீங்கள் அதை முறையாக எவ்வித சமரசமும் இல்லாமல் செய்தால், அது ஒரு கஷ்டமான வேலை தான். ஜாலியான வேலை இல்லை. இதில் நேர்மையும் தீவிரமான ஈடுபாடும் மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Congress leader Rahul Gandhi has said that the assassination Rajiv Gandhi was the single biggest learning experience: (ராஜிவ் காந்தி படுகொலை குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி) Congress leader Rahul Gandhi latest press meet about Rajiv Gandhi assassination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X