லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக பெரிய சிக்கலில் ரிஷி சுனக்! ரஷ்யா கைகளில் டாப் சீக்ரெட்.. காரணம் லிஸ் டிரஸ்! அதிர வைக்கும் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: ஏற்கனவே பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர் செய்யும் முயற்சியில் ரிஷி சுனக் இறங்கியுள்ள நிலையில், இப்போது அவருக்கு மற்றொரு தலைவலி ஏற்பட்டு உள்ளது.

பிரிட்டன் நாட்டில் ஏற்கனவே மிக மோசமான பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. உணவு தொடங்கி மின்சாரம் வரை அனைத்து விலையும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இதற்கு முந்தைய பிரதமர் லிஸ் டிரஸ் எடுத்த சில தவறான முடிவுகளே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பிரதமர் பதவியையும் இழந்தார்.

“ஹலோ” ரிஷி.. நான் மோடி.. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பறந்த போன் - என்ன பேசி இருக்காங்க தெரியுமா? “ஹலோ” ரிஷி.. நான் மோடி.. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பறந்த போன் - என்ன பேசி இருக்காங்க தெரியுமா?

 ரிஷி சுனக்

ரிஷி சுனக்

வெறும் 45 நாட்களில் அவர் பிரிட்டன் பிரதமர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரிட்டன் பொருளாதாரத்தைக் காப்பதே இப்போது முதல் நடவடிக்கை என்று கூறியுள்ள ரிஷி சுனக் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளார்.

 லிஸ் டிரஸ்

லிஸ் டிரஸ்

இதனிடையே ரிஷி சுனக்கிற்கு இப்போது மற்றொரு பிரச்சினையும் வந்துள்ளது. லிஸ் டிரஸ் மூலமே அவருக்கு இந்த பிரச்சினை வந்துள்ளது. கடந்த 2021-2022 வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த போது லிஸ் டிரஸ் தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது ஃபோனை ரஷ்ய உளவாளிகள் ஹேக் செய்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

 டாக் சீக்ரெட்

டாக் சீக்ரெட்

இதன் மூலம் பிரிட்டன் குறித்த டாப் சீக்ரெட் தகவல்கள் அந்த உளவாளிகள் கைகளுக்குச் சென்றுள்ளன. பிரிட்டன் தனது நட்பு நாடுகளுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன. மேலும், லிஸ் டிரஸ் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான குவாசி குவார்டெங் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல்களும் உளவாளிகள் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் இருவரும் உக்ரைன் போர் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

 ஓராண்டு மெசேஞ் லீக்

ஓராண்டு மெசேஞ் லீக்

கடந்த ஓராண்டாக லிஸ் டிரஸ் மொபைலில் இருந்து அத்தனை மெசேஞ்களையும் ரஷ்ய உளவாளிகள் டவுன்லோட் செய்துள்ளனர். தனிப்பட்ட நபர்களில் இருந்து தகவல் லீக் ஆவது குறித்து பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் கருத்து கூற மறுத்துவிட்டார். அவரிடம் இது குறித்துக் கேட்டபோது, "சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வலுவான அமைப்புகளை அரசு கொண்டுள்ளது.

 எப்போது

எப்போது

அமைச்சர்களுக்கு இது தொடர்பாக விளக்கி, சைபர் அட்டாகில் இருந்து தப்ப என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து விளக்கி வருகிறோம்" என்றார். கடந்த ஆகஸ்ட் இறுதியில் இந்த ஹேக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் போரிஸ் ஜான்சன் பதவி விலகி, புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது. அதில் தான் லிஸ் டிரஸ் வென்று பிரதமரானது குறிப்பிடத்தக்கது.

பிளாக்மெயில்

பிளாக்மெயில்

லிஸ் டிரஸ் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான குவாசி குவார்டெங் இடையே நடந்த உரையாடல்களில் வேறு சில தகவல்களும் ரஷ்யா உளவாளிகளிடம் சிக்கியுள்ளது. அப்போது பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் குறித்து லிஸ் டிரஸ் விமர்சனம் செய்த உரையாடலும் ரஷ்யாவுக்குச் சிக்கியுள்ளது. இதை வைத்து அவர்கள் அரசியல் ரீதியாக பிளாக் மெயில் செய்து இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 புதிய சிக்கல்

புதிய சிக்கல்

லிஸ் டிரஸ் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். எனவே, நட்பு நாடுகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை உள்ளிட்ட டாப் சீக்ரெட் தகவல்கள் அவரது மொபைலில் இருந்து இருக்கலாம். இதில் எதெல்லாம் இப்போது ரஷ்யா கைகளில் சென்றுள்ளது என உறுதியாகத் தெரியவில்லை. ஏற்கனவே, இக்கட்டான சூழலில் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு இது மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Former British Prime Minister Liz Truss's personal phone was hacked Russian agenst: New promblem for Rishi Sunak as Russia hacked Liz Truss's mobile
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X