அய்யய்யே.. அத்தனை பேர் கூடியிருக்க.. அந்த பெண்ணிடம்.. மலைத்து பார்த்த அரங்கம்.. திணறடித்த எம்பி.. செம
ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் சக எம்பியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார் மற்றொரு எம்பி
லண்டன்: பாராளுமன்றம் பிஸியாக நடந்து கொண்டிருந்தபோது, எம்பி ஒருவர் சீரியஸாக உரையாற்றி கொண்டிருந்தார்.. அப்போதுதான் இப்படி ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோவும் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
''காதல்'' இந்த ஒற்றை சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம்... காதலை சொல்லாத இலக்கியம் இல்லை.. காதலை சொல்லாத மொழிகள் இல்லை.. காதலை உணராத உயிர்கள் இல்லை.
பூக்கள் மட்டுமல்லாமல், போர்க்களங்களையும் திரண்டு கொண்டதுதான் காதல்.. காதலுக்கு வயது கிடையாது.. மொழி கிடையாது.. இனமும், மதமும் கிடையாது.. தூரங்கள் துளியும் கிடையாது..

2K KIDS
ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்தது முதல் இன்றைய 2K கிட்ஸ்களின் ஆன்லைன் வரை, படர்ந்து விரிந்து, காலம் காலமாக நம்முடனேயே பயணித்து வருகிறது காதல்.. ஜீவராசிகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து காட்டுவது, காதல் என்ற உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே.. அப்படிப்பட்ட காதலை வெளிப்படுத்த பலரும் நிறைய மெனக்கெடுவார்கள்.. பள்ளிகளில், ஸ்கூல்களில், காலேஜ்களில், பீச்சில், பார்க்கில், பஸ்ஸில் அல்லது ஏதோ ஒரு ரம்மியமான சூழலில், இனிமையான தருணத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தி கொள்வார்கள்.

சீரியஸ் டாக்
இதற்கு காரணம், அந்த காதல், தங்கள் வாழ்நாளெல்லாம் எப்போதுமே மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதால்தான்.. அதுபோலத்தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தன் காதலை வெளிப்படுத்த நிறையவே மெனக்கெட்டுள்ளார்.. அவர் ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர்.. தொழிலாளர் கட்சி எம்பியான அவரது பெயர் நாதன் லாம்பர்ட்.. இவர், நாடாளுமன்றத்தில் சீரியஸாக உரையாற்றி கொண்டேயிருந்தார்.. அப்போது அவையில் அனைவரும் இவரது பேச்சை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர்..

ரொமாண்ட்டிக்
பிறகு, யாருமே எதிர்பாராத வகையில், தன்னுடைய காதலியான எம்பி நோவா எர்லிச்சை பார்த்து, "நாம 2 பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா? உன்னை எனக்கு பிடித்திருக்கிறது.. கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. ஆனால், இப்போது மோதிரம் கொண்டு வரவில்லை.. பின்னிரவில் குழந்தைகள் தூங்க சென்றதும், ரொமாண்ட்டிக்காக அதை கொண்டு வந்து தருகிறேன் என்ற சொல்லி தன்னுடைய காதலையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.. இதை பார்த்ததுமே அங்கிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. காதலை வெளிப்படுத்தியதுமே அந்த பெண் எம்பியும் திகைத்து நின்றார்..

கரெக்ட் டைமிங்
பிறகு, நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்பியின் காதலை உற்சாகப்படுத்தினார்கள்.. இதனால் நாடாளுமன்றமே சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது... நாடாளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து நாதன், லம்பேர்ட்டின் காதலை, அந்த பெண் எம்பி.யான நோவா எர்லிச்சும் ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய விக்டோரியன் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் எம்பி. நாதன், வனம், எரிசக்தி காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவரும்கூட, எப்படியாவது ஒருநாள் தன்னுடைய காதலை வித்தியாசமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே திட்டு வந்துள்ளாராம் நாதன் லம்பேர்ட்..

சொதப்பல் பிளான்
ஆனால், இந்த கொரோனாபிரச்சனை நடுவில் வந்துவிடவும், எல்லா பிளான்களுமே சொதப்பலாகிவிட்டது. அதனால், கொரோனா முடிந்ததுமே இப்போது நாடாளுமன்றம் துவங்கி நடந்து வருவதால், இந்த முறை எப்படியாவது தன்னுடைய காதலை சக எம்.பியிடம் புரபோஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்தாராம்.. இத்தனைக்கும், எம்பி நாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications