பிரிட்டன், இங்கிலாந்து, UK ஒன்னு இல்லை.. இதுல இவ்வளவு வித்தியாசம் இருக்கா!
லண்டன்: யுகே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழிலாளர் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க.. நம்மில் பலரும் பிரிட்டன், யுகே, இங்கிலாந்து என அனைத்தும் ஒரே இடத்தை குறிப்பதாக நினைத்திருப்போம். உண்மையில் இவை வெவ்வேறு வார்த்தைகளாகும். இவை எதைக் குறிக்கிறது.. என்ன வித்தியாசங்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது. அதில் ரிஷி சுனக் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி வென்றுள்ளது. கீர் ஸ்டார்மரை பிரதமராகப் பதவியேற்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க.. பலருக்கும் பிரிட்டன், யுகே, இங்கிலாந்து இடையே உள்ள வேறுபாடுகள் தெரிவதில்லை.. சரி, இதற்கான வித்தியாசம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரிட்டிஷ் தீவுகள்: முதலில் பிரிட்டிஷ் தீவுகள்.. இதை ஆங்கிலத்தில் British Isles என்பார்கள். ஐரோப்பாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுகளின் கூட்டத்தை இந்த பிரிட்டிஷ் தீவுகள் என்பது குறிக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஐல் ஆஃப் வைட் என அப்பகுதியில் உள்ள அனைத்து தீவுகளையும் சேர்த்துத் தான் பிரிட்டிஷ் தீவுகள் என்பார்கள். இது புவிசார் அரசியல் வார்த்தை இல்லை. இவை முழுக்க முழுக்க புவியியல் தொடர்பான வார்த்தை மட்டுமே ஆகும்.
சரி முக்கியமா விஷயத்திற்கு வருவோம்.. பிரிட்டன், யுகே, இங்கிலாந்து இடையே என்ன வித்தியாசம்..
பிரிட்டன்: பிரிட்டன் என்பதும் புவிசார் அரசியல் வார்த்தை இல்லை.. அதுவும் புவியில் தொடர்பான வார்த்தை தான். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய 3 நாடுகளைக் கொண்ட பகுதியைக் குறிப்பதே பிரிட்டன் ஆகும். இதை கிரேட் பிரிட்டன் என்றும் குறிப்பிடுவார்கள்,
யுனைடெட் கிங்டம்: அடுத்து யுகே- அதாவது யுனைடெட் கிங்டம்.. இது தான் புவிசார் அரசியல் தொடர்பான வார்த்தை. பிரிட்டனுடன் சேர்ந்து வடக்கு அயர்லாந்தும் சேர்ந்து வருவதே யுகே அல்லது யுனைடெட் கிங்டம் என குறிப்பிடப்படும். அதாவது இந்த யுகே கீழ் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து என 4 நாடுகள் இருக்கும். இது ஒரு sovereign state. இந்த யுகே பகுதிக்குத் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் தான் ரிஷி சுனக் கட்சியும் படுதோல்வி அடைந்தது.
முன்பே கூறியது போல இந்த யுனைடெட் கிங்டமில் மொத்தம் 4 நாடுகள் இருக்கும் நிலையில், அதில் ஒரு நாடு தான் இங்கிலாந்து. இது தவிர இதில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளன.
அயர்லாந்து: உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரலாம்.. அயர்லாந்து தனியாக ஒரு நாடு இருக்கிறதே.. அது என்ன வடக்கு அயர்லாந்து என்ற சந்தேகம் வரலாம்.. அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள ஒரு சின்ன ஹிஸ்டரியை நாம் பார்க்க வேண்டும்.

பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள நாடுகளில் ஒன்று தான் அயர்லாந்து.. இது 12ஆம் நூற்றாண்டில் ஆங்கில காலணியாக இருந்தது.. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒட்டுமொத்த அயர்லாந்தும் யுகேவில் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. இருப்பினும், 1927இல் நிலைமை மாறியது. அயர்லாந்து தனி நாடாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தது. இருப்பினும், அயர்லாந்து வடக்கே உள்ள 6 மாவட்டங்கள் மட்டும் யுகேவில் தொடர விரும்பியது. இதன் காரணமாக வடக்கு அயர்லாந்து யுகேவின் ஒரு பகுதியாக நீட்டிக்கிறது.
அதாவது அயர்லாந்து என்பது தனி நாடு. அதேநேரம் வடக்கு அயர்லாந்து என்பது யுகே கீழ் வரும் ஒரு பகுதியாகும். இருந்தாலும் குழப்பமாக இருந்தால்.. கீழே இருக்கும் மேப்பை பார்த்தால் உங்களுக்கு இது மேலும் தெளிவாகப் புரியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications