Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்சர்வேட்டிவ் VS தொழிலாளர் கட்சி.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மொத்த பிரிட்டனும் மாறப்போகுது!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் ஆட்சியை விட்டு அகலும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், அரியணை ஏறும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது? இருகட்சிகளின் கொள்கைகள் என்ன? புதிதாக அமைந்துள்ள தொழிலாளர் கட்சியின் ஆட்சி எப்படி இருக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்தார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் ரிஷி சுனக்கின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து திட்டமிட்டப்படி நேற்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 326 இடங்களில் வெல்ல வேண்டும்.

UK Election Results 2024 conservative party 2024

இந்த தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று தேர்தல் அமைதியாக முடிவடைந்த நிலையில் இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆட்சி மாற்றம்: இதில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. மாறாக கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதாவது 650 தொகுதிகளில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி கூடுதலாக 84 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக அந்த கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்க உள்ளார்.

மாறாக இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 119 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி கடந்த தேர்தலில் 357 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 119 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் 14 வருடத்துக்கு பிறகு தொழிலாளர் கட்சி அரியணை ஏறுகிறது.

இந்நிலையில் தான் பலருக்கும் பிரிட்டனில் புதிதாக ஆட்சி அமைக்க உள்ள லேபர் எனும் தொழிலாளர் கட்சிக்கும், ஆட்சியை இழந்த பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே என்ன வித்தியாசம்? இரண்டு கட்சிகளின் கொள்கைகள் என்ன?, அதிகாரத்தில் இருக்கும்போது இருகட்சிகளும் எப்படி செயல்படும்? இந்த முறை தொழிலாளர் கட்சியின் புதிய ஆட்சி எப்படி இருக்கும்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

தொழிலாளர் கட்சி: பிரிட்டனை பொறுத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிகள் ஆகியவை தான் பெரிய கட்சிகளாகும். இந்த கட்சிகள் தான் மாறி மாறி அரியணை ஏறி வருகின்றன. தற்போதைய தேர்தல் மூலம் பிரிட்டனில் அரியணை ஏறியுள்ள தொழிலாளர் கட்சி கடந்த 1900ல் தொழிலாளர்கள் மற்றம் தொழிற்சங்கங்களுக்கான கட்சியாக உருவானது.

கன்சர்வேட்டிவ் கட்சி: மாறாக ஆட்சியை பறிகொடுத்த ரிஷி சுனக்கின் கட்சி என்பது 1834ல் இருந்தே உள்ளது. பெரும் நிலம் படைத்தவர்கள், பெரிய வணிகர்கள் மற்றும் தேவாலய நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது தான் கன்சர்வேட்டிவ் கட்சியாகும்.

சித்தாந்தம்: தொழிலாளர் கட்சி என்பது சமூக நீதி கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சியாகும். சோசியலிசத்தை ஊக்குவிக்கும் இந்த கட்சி மைய இடது (Center - Left Party)அரசியல் கட்சியாக இருக்கிறது. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கத்தில் இருந்து இந்த கட்சி பிறந்ததால் பணம் மற்றும் செல்வந்தர்களிடம் இருக்கும் அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்ந்தளித்து சமத்துவத்தை உண்டாக்க வேண்டும் என்பது தான் இந்த கட்சியின் சித்தாந்தமாகும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி உள்ளிட்டவற்றை அரசு தான் வழங்க வேண்டும் என்பதில் இந்த கட்சி உறுதியாக இருக்கும்.

மாறாக கன்சர்வேட்டிவ் கட்சி என்பது பிரிட்டனில் தடையற்ற சந்தை பொருளாதார கொள்கை, பிரிட்டிஷின் பழமைவாத பாரம்பரியத்தை முன்னெடுக்கும் மைய வலது (Centre - Right Party) அரசியல் கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் கொள்கை என்பது குறைந்த வரிவிதிப்பு, தனியார் மயமாக்கலை கொள்கையாக கொண்டுள்ளது. மேலும் தனியார் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தான் இந்த கட்சியின் நோக்கமாகும்.

கொள்கைகள்: தொழிலாளர் கட்சியை பொறுத்தவரை பொதுமக்களுக்கு தேவையான எரிசக்தி, போக்குவரத்து, மலிவு விலை வீடுகளை உருவாக்கும் திட்டத்தை வைத்துள்ளது. மேலும் வீட்டுச் சந்தை சீர்திருத்தம், தனியார் வாடகை துறையை ஒழுங்குபடுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை விரிவுப்படுத்துதல், கார்பன் உமிழ்வை குறைத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை வைத்து செயல்பட உள்ளது. அதேவேளையில் கன்சர்வேட்டிவ் கட்சி என்பது பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறையை போக்குவது, நிதி செலவினத்தில் பொது சேவைகளுக்கான அளவை குறைப்பதை முன்னெடுத்தது. அதன்படி ரயில்வே உள்ளிட்ட பல பொது சேவைகளை தனியார் மயமாக்குவது. இதனால் தொழிலாளர் நலனில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட குறைந்த கவனம் மட்டுமே செலுத்துகிறது.

ஆட்சி எப்படி இருக்கும்: தொழிலாளர் கட்சியின் ஆட்சி என்பது சமூக நீதி, பொருளாதார சமத்துவம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டது. இதனால் தனிநபர் வருமானத்தை கவனத்தில் கொண்டு இந்த கட்சியின் ஆட்சி இருக்கும். மேலும் அனைத்து மக்களுமான தேவையை அரசே ஏற்று செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆட்சி என்பது இருக்கும். மாறாக கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தமட்டில் தனிநபர், நிறுவனங்களின் பொருளாதாரம் மீது கண்டுகொள்வது இல்லை. மாறாக அரசு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சி செயல்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+