லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டனில் ஷாக்.. 10 மாதங்கள் இருந்த கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்? யாருக்கெல்லாம் இப்படி ஏற்படும்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 72 வயது நபர் ஒருவருக்குக் கடந்த 10 மாதங்களாகவே தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது கொரோனா வைரஸ் தான். இந்த வைரசுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டாலும்கூட இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

பொதுவாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர் அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களில் குணமடைந்துவிடுவார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டில் மிக விநோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்! ஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்!

பிரிட்டன் நபர்

பிரிட்டன் நபர்

மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற டிரைவிங் ஆசிரியர் டேவ் ஸ்மித். நுரையீரல் பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்குக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அனைவரையும் போலவே இவரும் தனக்கு ஓரிரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சரியாகிவிடும் என்றே நினைத்துள்ளார். இருப்பினும், இவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.

300 நாட்கள் 43 சோதனைகள்

300 நாட்கள் 43 சோதனைகள்

சுமார் 300 நாட்களுக்கு மேலாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 43 முறை அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அனைத்து சோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளது. இதனால் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், வேலையில் இருந்தும் தான் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் அவ்வளவு ஏன் இறுதி சடங்கிற்கான ஏற்பட்டைகூட செய்ததாகத் தெரிவித்தார்.

ஆக்டிவ்வாக இருந்தது

ஆக்டிவ்வாக இருந்தது

இது குறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆலோசகரான எட் மோரன் கூறுகையில், "அந்த 300 நாட்களும் அவரது உடலில் வைரஸ் ஆக்டிவாகவே இருந்தது. வழக்கமாக ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும், அவர்களின் உடலில் சில வாரங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கும். ஆனால் அது ஆக்டிவாக இருக்காது. அதேநேரம் இவரது உடலில் இருந்த வைரஸ் முழுவதுமாக ஆக்டிவாகவே இருந்தது" என்றார்.

ஆன்டிபாடி காக்டெய்ல்

ஆன்டிபாடி காக்டெய்ல்

இதையடுத்து அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரெஜெனெரான் உருவாக்கிய செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டில் இந்த வகை சிகிச்சைக்குத் தடை உள்ளபோதும், இவரது நிலையைப் பரிசீலனை செய்து சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னரே அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். சரியாக 305 நாட்களுக்குப் பின், அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

அதிக நாட்கள்

அதிக நாட்கள்

இயற்கையாக வலுவான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய முடியாத உடல்களில் இதுபோல கொரோனா நீண்ட காலம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த இவருக்கு நுரையீரல் பாதிப்பு, லுகேமியா இருந்துள்ளது. இருப்பினும், இதனை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 செயற்கை ஆன்டிபாடி

செயற்கை ஆன்டிபாடி

இந்த செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் மூலம் ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்த நபருக்குத் தான் உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இது குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
UK man tested Covid positive for 10 straight months, hospitalized 7 timesA 72-year-old British man tested positive for coronavirus for 10 months. He is thought to be the longest recorded case of continuous infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X